பக்கம்:தமிழ் இனம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

தமிழ் இனம்

ரேலிய மொழிகள் பேசும் மக்களிடம் கேட்கலாம். இவை இப்பண்டை மக்களுடைய கதைகளெனக் கூற இடமுண்டு. பண்டை இந்தியச் சமூக மத விஷயங்களில் ஆசிய-ஆஸ்திரேலிய நாகரிகம் ஓரளவு குடிகொண்டுள்ளது உண்மையாகும் ‘, என்று கூறியுள்ளமை,[1] இன்றைய மாகாபாரதத்திலுள்ள கதைகளுள் சிலவேனும் இந்த ஆசியஆஸ்திரேலிய மக்களிடம் பன்னெடுங் காலமாக வழங்கி வந்தனவாக இருத்தல் கூடும் என்பதை நம்ப இடம் தருகிறது. “ வியாச பாரதத்தில் இன்று ஒரு லட்சம் சுலோகங்கள் உள்ளன. இவை நடையில் பல்வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன. எனவே, மூலநூல் மிகக் குறைந்த அளவிலேயே இருந்திருத்தல் வேண்டும், ‘ என்று R. C. டட் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளமையும் கவனிக் கத்தகும்.[2]

———————

  1. Pre-Aryan and Pre-Dravidian in India, pp. 13, 15 and 135.
  2. “As Mr. Butt has remarked, “Every later poet and editor has contributed his mite towards enlarging, altering and distorting the ancient epic; every new sect has been careful to incorporate its new fangled tenets in this national work.” The Ramayana and the Mahabaratha in the form in which we have them now were finally completed more tham fisteen centuries after the events described in them took place, and many legends were added from time to time by numerous writers.” –The Menace of Hindu Inperialism, p, 58.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/111&oldid=1361959" இலிருந்து மீள்விக்கப்பட்டது