பக்கம்:தமிழ் இனம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

தமிழ் இனம்

இங்ஙனம் தீப்பாய்ந்து உயிர்விடும் பத்தினியைப் பண்டை மக்கள் பாராட்டிக் கல்நட்டுத் தெய்வமாக வழிபடல் மரபு. அவளைத் தீப்பாய்ந்த அம்மன் என்று அப்பண்டை மக்கள் குறித்தனர். அத்தீப்பாய்ந்த அம்மன் கோவில்கள் பல திரெளபதியம்மன் கோவில்களாக மாற்றப்பட்டன.[1] திரெளபதியம்மன் கோவில்களில் தீப்பாய்தல் இன்றும் வழக்கில் உளளது.

தருமராஜர்

இவ்வாறே பெளத்த சமயம் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்த காலத்தில், பல சிற்றூர்களில் புத்தருக்குக் கோயில்கள் கட்டப்பட்டன. புத்தருக்குரிய பெயர்களுள் தருமராஜர் என்பதும் ஒன்று. அப்பெயரால் பல கோவில்கள் தமிழகத்தில் ஏற்பட் டன. பாரதக்கதை தென்னாட்டில் நன்கு, பரவத் தொடங்கியபிறகு - பெளத்த சமயம் வீழ்ச்சியுற்ற பிறகு - புத்தரான தருமராஜர் கோயில்கள், பாண்டவருள் மூத்தவனை தருமராஜன் கோவில்களாக

———————

  1. இவ்வாறே, தாராதேவி, மங்கலாதேவி, சிந்தா தேவி முதலான பெளத்த தெய்வங்களின் கோயில்களும் பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் மாற்றப்பட்டனவாகத் தெரிகின்றன. தாராதேவி கோயில் திரெளபதியம்மன் கோயில் என இப்பொழுது வழங்கப்படுகிறது. ” - பெளத்தமும் தமிழும், ‘ பக். 151.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/113&oldid=1361918" இலிருந்து மீள்விக்கப்பட்டது