பக்கம்:தமிழ் இனம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணியின் காதல்

119

வமோ, சமுதாயத்திலுள்ள உயர்வு தாழ்வுகளோ, பிறவோ அல்ல. இந்த உண்மையைப் பெற்றாேர் உணர்வதில்லை. "கை நிறைந்த பொன்னைவிடக் கண் நிறைந்த கணவனே மேல்’’ என்பதுதான் பெண்ணின் கவலை. அப்பெண்ணின் மனநிலை பெற்றாேர்க்கு அமைவதில்லை. அவர்கள் சூழ்நிலையையும் பதவியையும் பிற ஆடம்பரங்களையுமே கவனிக்கின்றனர். கல்வியறிவும் மன உறுதியும் உடைய பெண்கள் தங்கள் மனக் கருத்தைச் சிறிதும் மறையாமல் பெற்றாேரிடம் கூறிவிடுவர். அறிவுடைய பெற்றாேர் அவர் விருப்பப்படியே நடப்பர். அந்நிலையில் அவளது மணவாழ்வு மணமுள்ளதாக ஒளிரும். தாம், நினைத்தபடியே நடத்த வேண்டும் என்னும் பிடிவாத குணமுள்ள பெற்றோர், புதியவன் ஒருவனுக்குத் தம் மகளை மணமுடித்து விடின், அந்த மணவாழ்வு மணமற்ற மலர்போல ஒளி மழுங்கியதாக இருக்கும். அப் பெண் உணர்ச்சியற்றவளாய், நடைப்பிணமாய் வாழ்க்கை நடத்துவாளே தவிர, வாழ்வரசிக்குரிய பொலிவுடன் விளங்கமாட்டாள். இந்நிலை வரும்போது, திருமணத்திற்கு முன்னரே காதலனும் காதலியும் ஓடிவிடுவர்; சிலர் தங்களை மாய்த்துக்கொள்வர்; சில பெண்கள் தம்மளவில் தற்கொலை செய்து கொள்வர். அந்நிகழ்ச்சிகளை நாம் நமது நாட்டிற் காண்கின்றாேம், இலக்கிய அறிவும் பரந்த உலக அறிவும், எதனையும் எண்ணிப் பார்த்துச் செயலாற்றும் திண்மையும் பெற்றாேர் பலரிடம் இல்லாமையே இச் சீர்கேடுகளுக்குக் காரணமாகும்.

தமது பெண் விரும்பும் காதலன் எச்சாதியானாயினும், எச்சமயத்தவனாயினும், அவனுக்கு மண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/116&oldid=1481019" இலிருந்து மீள்விக்கப்பட்டது