பக்கம்:தமிழ் இனம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

தமிழ் இனம்

முடித்து வைத்தலே அறிவுடைப் பெற்றாேர் கடமை. இக் கடமை யுணர்ச்சியைப் பெற்றோர் உணர்ந்து நடப்பாராயின், குடும்பத்தில் கணவன்-மனைவி போராட்டம், ஒழுக்கக்கேடு, கொலை, ஓடிவிடுதல் முதலிய இழி செயல்கள் மிகுந்த அளவு குறையும் என்பதில் சிறிதும் ஐயமிலலை. நிறைந்த கல்வியறிவும், பரந்த உலக அறிவும், உண்மை காணும் உள்ள உரமும், சமுதாய மூடக்கருத்துக்களுக்கு அஞ்சாத நெஞ்சமும் பெற்றாேரிடம் தோன்றும் நாளில்தான் இக் குறைபாடுகள் நீங்க முடியும்.


ஒரு பெண் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அவள் தந்தை அவளை வேறொருவனுக்கு மணம் செய்விக்க விரும்புகிறான். இந்த ஏற்பாட்டைப் பெண் மறுக்கிறாள். அரசன் தந்தை வழி நிற்கும்படி மகளை வற்புறுத்துகிறான்-அஞ்சாத நங்கை அரசனே மறுத்துரைக்கிறாள். தந்தை மகளை வெறுக்கிறான், இறுதியில் காதல் வெற்றி பெறுகின்றது. இந்நிகழ்ச்சி பேராசிரியர்.சுந்தரம் பிள்ளை எழுதியுள்ள மனோன்மணியம் என்னும் நாடகத்தில் ஒரு பகுதியாக வருகின்றது.

வாணி-நடராசன்

சீவகன் பாண்டிய நாட்டு மன்னன்; குடிலன் முதலமைச்சன்; சகடன் என்பவன் பாண்டிய நாட்டுப் பிரபுக்களில் ஒருவன். அவன் மகள் வாணி என்பவள். அவள் சிறந்த படிப்புடையவள்; பேரழகு உடையவள்; வியத்தகு ஒழுக்கமுடையவள்; இப் பெண்மணி பாண்டியன் மகளான மனோன்மணியின் உயிர்த்தோழி. இவள் நடராஜன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/117&oldid=1361857" இலிருந்து மீள்விக்கப்பட்டது