பக்கம்:தமிழ் இனம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழ் இனம்

மன்னன் :-

வாணி, நலத்திலும் குலத்திலும் சிறந்த குடிலன் மகனான பலதேவனை மணக்க மறுப்பது ஏன் ? பித்தனை மணக்க விரும்புகின்றாயே! உன் செயல் நகைப்புக்கு இடமாகும்.

வாணி :-

பெருமானே, நாட்டையாளும் மன்னனாகிய உன்னிடம் என் மனநிலையை விரித்துக் கூற, என்னிடம் இயல்பாக உள்ள நாணம் தடை செய்கிறது. ஆயினும், கூறுவேன் கேட்டருள்க : காதல் வயப்படாத திருமணம் வாழ்க்கையின் அழிவுக்குத்தான் காரணமாகும்.

மன்னன் :-

பெண்ணே, நீ கூறுவது புதுமையாக இருக்கின்றது. பெற்றாேர் தம் பெண்ணுக்கு மணம் முடித்துவைப்பர். அப்பெற்றாேர் சொற்படி நடந்துகொள்வதே பெண்கள் கடமை ; பெற்றாேர்க்கு மாறாக நடப்பது அறமாகாது.

வாணி :-

ஐயனே, காதல் என்பது நாமாக ஆக் கிக்கொள்ளும் பொருள் அன்று. துன்பம் நிறைந்த இந்த உலகில் துன்புறும் ஆடவர் நெஞ்சம் குளிரச் செய்தும், தொழிலில் உண் டாகும் கவலையை ஆற்றியும், அவர்தம் நெறி முறை காத்தும், முயற்சியில் சோர்கின்ற பொழுது ஊக்கம் ஊட்டியும், நற்றாெண்டு செய்வது காதல். இக்காதல் இவ்வுலக இன்பத்துக்கு அளவுகோலாகும்; இல்லறம் என்பதற்கு நல்லுயிராகும். இரும்பும் காந்தமும் பொருந் தும் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல் பாய் உருகி ஒன்றுபடுவதே காதலின் தன்மை. இக்காதல் ஒருவரால் ஆக்கப்படும் பொருள் ஆகாது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/119&oldid=1361805" இலிருந்து மீள்விக்கப்பட்டது