பக்கம்:தமிழ் இனம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணியின் காதல்

123

மன்னன் :-

இவையெல்லாம் யானறியேன் ; பிஞ் சில் பழுத்த பேச்சை விடு ; மிஞ்சாதே : தந்தை சொற்படி நட.

வாணி :-

அங்ஙனம் நடவாவிடின் ?

மன்னன் :-

என்றும் நீ கன்னியாயிருப்பாய்.

வாணி :-

சம்மதம்.

மன்னன் :-

கன்னியாயிருப்பாயின் உன் அழகு பாழாகும். அரைக்கில் அன்றாே சந்தனம் கமழும் ?

வாணி :-

அச்சந்தனக் கட்டையைக் கரையான்

அரித்தால் மணக்குமா ?

மன்னன் :-

நீ பிடித்த முயலுக்கு மூன்றுகால்

என்று சாதித்தால் என் செய்வது ?

வாணி :-

இப்பிடிவாதம் பெற்றாேரிடமிருந்தால்

பெண்கள் எவ்வாறு பிழைப்பர்?

மன்னன் :-

சகடன் சொற்படி நாம் திரு மணத்தை நடத்துவோம். ஆயினும் உன் கருத்தையறிய ஐந்துநாள் தவணை கொடுக் கிறோம்.

வாணி :-

பெருமானே, யான் இறப்பதாயிருந் தாலும் இத்திருமணத்திற்கு இசையேன். யான் மறுத்துக் கூறிய அனைத்தும் பொறுத் தருள்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/120&oldid=1361835" இலிருந்து மீள்விக்கப்பட்டது