பக்கம்:தமிழ் இனம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழ் இனம்

“ அவளுந்தான்,
போதிலார் திருவினால் புகழுடை வடிவென்னும்
தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்று
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
தலாள் பெயர்மன்னும்கண்ணகியென்பாள்மன்னே”

- மங்கல வாழ்த்துக் காதை

இவற்றால் இருவரும் கற்பு மணத்திற்கு முன்னே கனிந்த காதலர் ஆக- உள்ளப்புணர்ச்சி உற்ற மெய்க்காதலராக விளங்கினர் என்பது தேற்றம்.

இனி,' இக்காதலர்க்கு வயதிவ்வளவு இருத்தல் வேண்டும்’ என்பது தொல்காப்பியம் கூறிற்றிலது. அதன் உரையாளரே காதலர் வயதை நிறுவுதல் காண்கிருேம். அவர்கள் சிலப்பதிகாரத்தையே ஆதாரமாகக்கொண்டு வயதை நிர்ணயம் செய்தனர் என்று நினைக்க வேண்டியிருக்கிறது. சிலப்பதிகாரம் கண்ணகிக்கு 12 வயதும் கோவலற்கு 16 வயதும் எனக் கூறுகிறது. அக்கால ஆடவர் பெண்டிர் 12 வயதில் நல்ல உடற்கட்டுடன் இருந்திருக்கலா மெனத் துணிதல் வேண்டும். அவள் சிறுவய தினளே என்பதை அடிகள் நாடுகாண் காதை வரி 40-இல் ‘ முதிராக் குளவியள்’ என வற்புறுத்திக் கூறுதலும் காணத்தக்கது. மேலும், அழற்படு காதை ஈற்று வெண்பாவில் அடிகள் “ முதிரா முலை குறைந்தாள் ” எனக் கூறுதலும் கண்ணகியின் இளமையை நன்குணர்த்துகிறதன்றாே ?

இக்காலத்தும் தமிழகத்தே பன்னிரண்டு வய துடைய பெண்கள் பெரிய பெண்களாக இருப் பதைக் கண்டோர், 2000 ஆண்டுகட்குமுன் பன் னிரண்டு வயதில் மணம் செய்துகோடல் இருந் திருக்கலாம் எனத் துணிவர் என்பதில் ஐயமில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/51&oldid=1358695" இலிருந்து மீள்விக்கப்பட்டது