பக்கம்:தமிழ் இனம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 தமிழ் இனம்

வாழ்த்தி மணமகளை நீராட்டிப் புத்தாடை உடுத்துப் பழைய மணல் நீக்கப்பெற்றுப் புதுமணல் பரப்பப் பெற்ற மணப்பந்தலில் (மணமகனுக்கருகில்) அமரச் செய்தனர். தலைவியின் பெற்றாேர் கொளற்குரி மரபின் கொடுப்பத் தலைவனுடைய பெற்றாேர் ஏற்றனர். இதனையே குறித்து 136-ஆம் செய்யுளும் செப்புகின்றது. இது கொண்டே காலஞ்சென்ற வரலாற்றுப் பேராசிரியரான பி. டி. சீநிவாச ஐயங்கார் அவர்கள் தமது பழங்காலத் தமிழர் ‘ என்னும் மாண்புமிக்க நூலில், “ இப்பண்டைத் தமிழ் மண முறையில் ஆரியக் கலப்புடையது ஒன்றுமில்லை; எரி வளர்த்தல் இல்லை; தீவலம் வருதல் இல்லை; தட்சினைப்பெறப் புரோகிதன் இல்லை. இது முற்றும் தமிழர்க்கே உரிய தமிழ் மணம்” என அழகாக (பக்கம் 80-இல்) அறைந்துள்ளமை அறியற்பாலது.

இக்கண்ணகி-கோவலன் திருமணத்தில் ‘தாலி’ இல்லை என்பது நன்கறியத் தக்கது. அகலுள் மங்கல அணி எழுந்தது’ எனவரும் அடியைக் கொண்டும் ‘மங்கல அணி-மங்கலிய சூத்திரம் வலஞ் செய்தது எனவரும் அரும்பதவுரை கொண்டும், சிலர் தாலி உண்டு என்கின்றனர். மங்கல அணி என்பது மாங்கலிய சூத்திரம் ஆயின், மண அணி’ காண மகிழ்ந்தனர்’ என வருவதில் உள்ள ‘மண அணிக்குப் பொருள் யாது கூறுவர்? மண அணி’ என்பது ‘திருமண வைபவம்; அதனைக் காணப் பெற்றாேர் விழைந்தனர், என்பதேபொருள். எனவே, அணி, அழகு, வைபவம், சிறப்பு என்பதே கடைந்தெடுத்த பொருளாகும். அரும்பதவுரை யாசிரியரே மனையறம்படுத்த காதையுள் வரி63-இல், “மறுவின் மங்கல அணியே அன்றியும்” என வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/53&oldid=1359524" இலிருந்து மீள்விக்கப்பட்டது