பக்கம்:தமிழ் இனம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி 57

வதில் உள்ள மங்கல அணிக்கு ‘இயற்கை அழகு” எனப் பொருள் கூறுதலும் நோக்கத்தக்கது. இதற்கே அடியார்க்கு நல்லார் இயற்கை அழகு எனப் பொருள்கூறிப் பின்னர், மங்கல அணி-மாங்கலியம் என்பாரும் உளர் ‘ எனக் கூறுதலும் கவனிக்கத்தக்கது. இஃதொன்றே, மங்கல அணி - மங்கலியம் அன்று என்பது அடியார்க்கு நல்லாரது கருத்தென்பதை விளக்கப்போதுமன்றாே? பின்னும், அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில், வரி 50-இல் ‘ மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் ” என வரு மிடத்து, “மங்கல அணி-இயற்கை அழகு ” என அரும்பதவுரையாளரே கூறுதலும் காண்க. மேலும் அணியாள் என அடிகள் கூருது மகிழாள் ” எனக் கூறியிருத்தலும் கூர்ந்து நோக்கத்தக்கது.

பலவகை வாத்தியங்கள் எழுந்தன ; அதனல் ஊரில் மங்கல அணி (திருமண வைபவம்) எழுந்தது (பொலிவுற்று விளங்கியது) என்பதே இதன் கருத்து. இன்றேல், அடியார்க்கு நல்லார், தமக்கு முன்னவரான அரும்பதவுரையாளர் கூற்றைத் தழுவாமல், மங்கல அணி ஊரெங்கும் எழுந்தது என்க” எனக்கூறி வாளாவிட்டிருப்பரோ? தாலி வலம் வந்ததாயின், அஃது அடியார்க்கு நல்லார்க்கு ஒப்பமுடிந்த ஒன்றாயின், அவர் கூறாதிருப்பரோ? அரும்பதவுரையாளர் தம் காலவழக்கத்தினைச் சிலப் பதிகாரத்தொடர்க்கு ஏற்றினர் என்பதை அறிந்தே போலும் அடியார்க்கு நல்லார், ‘மாங்கலிய சூத்திரம்’ என்னும் தொடரையே விட்டுவிட்டனர் அரும்பத வுரையாசிரியர் கூற்றுப்படி மங்கல நாண் வலம் வந்தது உண்மை ஆயின், திருமணச் சடங்குகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/54&oldid=1359538" இலிருந்து மீள்விக்கப்பட்டது