பக்கம்:தமிழ் இனம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 தமிழ் இனம்

“ வண்டுவாய் திறப்ப நெடுநிலா விரிந்த

வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு கழுநீர்ப் பிணையல் முழுநெறி பிறழத் தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுத் தீராக் காதலில் ‘ திளைத்தனர் இருவர். என வரும் அடிகளின் பொருள் நுட்பமும் இவ்வடி களைக் கூறிய ஆசிரியரது புலமைப் பண்பும் பொன்னே போலப் போற்றத் தக்கவை. அக் காதையின் அடியில் வரும் அடிகளது வெண்பாவி ளுல் காதலரது ஒன்று கலந்த வாழ்க்கை நன்கு வெளியாதல் காண்க.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லென ஒருவார் காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம் தொலையாத இன்பமெல்லாம் துன்னிஞர் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று. ‘

தனித்திருந்த தையல்

கோவலன் மாதவிபால் பேரன்புகொண்டு மனைவியை அறவே மறந்து, மாதவியின் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தான். கணவனைப் பிரிந்த காரி கையோ அக்கால வழக்கப்படி-உண்மைத் தன்மை வாய்ந்தவள். ஆதலின்-துயில் கொண்டிலள் ; அஞ்செஞ்சீறடி அணி சிலம்பு ஒளிந்தாள் ; கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள் ; மங்கல அணி (இயற்கை அழகு) அன்றிப் பிறிதணியில் மகிழ்ச்சி கொள்ளவில்லை ; காதணி தனது இருக்கையில் இராது தாழ்ந்து கிடந்தது , செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறந்தன ; பவளவாள் நுதல் திலகம் இழந்தது ; அவளது தவளவாள் நகையைக் கோவலன் இழந்தான். மையிருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/57&oldid=1359573" இலிருந்து மீள்விக்கப்பட்டது