பக்கம்:தமிழ் இனம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 தமிழ் இனம்

    • . . . ...யாவும்

சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக்

குலந்தரு வான்பொருள் குன்றம் தொலைத்த

இலம்பாடு நாணுத் தருமெனக்கு

- கனாத்திறமுரைத்த கதை

என நன்முறையில் நவில, அப்பத்தினிப் பெண், ‘முறுவல் நகைமுகம் காட்டி, சிலம்புள கொள்க’ என்றாள். இஃதொன்றால், அப்பெண்மணியின் பெருந்தகைமை இற்றென இனிது விளங்குகிறதன்றாே?

பின்பு அவன் விருப்பப்படி கண்ணகி தன் தொன்முது நகரைப் பிரிந்து-தாய் தந்தையாரைப் பிரிந்து-உறவினரைப் பிரிந்து-யாவர்க்கும் தன் பிரிவை அறிவியாமல், கணவனுடனே கங்குற் போதில் புறப்பட்டாள் எனின், அவளது கற்பின் சிறப்பினை என்னென்பது!

வழிநடக்குங்கால், நெடுந்தொலை நடந்தறியாப் பாவையாதலின், கண்ணகி அடிகள் வருந்தின. அதனால், ‘முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்க“க் கணவனை நோக்கி, “மதுரை மூதூர் யாது?’ என நயமாக வினவினாள் என்பது, அவளது ஒழுக்க நிலைமையைக் குன்றின்மீதிட்ட விளக்கென ஒளிரச் செய்கிறதன்றாே?

வழியில் இக்காதலரைக் கண்ட பற்றற்ற கவுந்தியடிகளும் கண்ணகிபால் பற்றுக் கொண்டனர் எனின், கண்ணகியின் ஒழுக்க நலனையும் குண நலனையும் எண்ணிப் பார்மின்!

ஐயைக் கோட்டத்துள் சாலினி தெய்வ மாடுங்கால், கற்பரசியாய கண்ணகி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/59&oldid=1361456" இலிருந்து மீள்விக்கப்பட்டது