பக்கம்:தமிழ் இனம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. சங்க காலத்து அன்னதானம்

சங்க நூல்களில் “அன்னதானம்” எங்ஙனம் பாராட்டப்பட்டுள்ளது என்பதைப் பற்றி இங்குக் காணுவோம் :

சங்க நூல்களில் புறநானூறும் மணிமேகலையும் பற்றியே ஈண்டுக் குறிப்பிட விரும்புகிறேன். புறநானூறு நடந்ததை நடந்தவாறு கூறிய காலத்தது , மணிமேகலை உள்ளதும் இல்லதும் கூறப்பட்ட காலத்தது : மணிமேகலை, பெளத்தத்தைத் தமிழர் பாராட்டிய காலத்தது. புறநானூறு பல நூற்றாண்டுகளில் இருந்த புலவர் பாடல்களைக் கொண்டது. மணிமேகலை கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டது. எனவே, இவ்விரண்டையும் ஆராய்வதால் பழங்தமிழர் அன்னதான நிலையையும், பல மதங்கள் இருந்த காலத்துத் தமிழர் அன்னதான நிலையையும் உள்ளவாறு உணரலாம்.

பசிப்பிணி

‘பசிப் பிணியைப் போக்குவதே சிறந்த அறச் செயல் என்பது பண்டைத் தமிழர் கொண்டிருந்த முடிபாகும். இதனைப் பற்றிப் புறநானூறும் மணி மேகலையும் கூறுவனவற்றை நிரலே காண்க: புறநானூறு 160, 164-ஆம் பாக்கள் பசிப்பிணியைப் படம் வரைந்து காட்டுகின்றன. பெருஞ்சித்திரனார் என்னும் பைந்தமிழ்ப் புலவர் தம் குடும்பத்தைப் பிய்த்துத் தின்ற வறுமை இற்றென எடுத்தியம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/76&oldid=1394131" இலிருந்து மீள்விக்கப்பட்டது