பக்கம்:தமிழ் இனம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிஞ்சிக்கலி

93

வரின், மலையில் நின்று பலியைக் கொள்ளும் அணங்கு என்று இவ்வூரார் கருதி நின்னை அஞ்சு வர். நீ செய்யும் கொம்போசை கேட்கின், கல் லெறியும் கவணையும், எரியும் கொள்ளியையும் வில்லையும் உடைய கானவர், யானை வந்ததென்று கருதி ஆரவாரம் செய்வார்கள். நீ குறியிடத்து வருங்கால், நின்னைக் கண்டு விலங்கு முதலியன அஞ்சி ஓடும் ஒசையாலே நின்னைப் புலி என்று இவ்வூர் எண்ணுமே !

“ ஒப்பற்ற அறிவுடையாய், இக்களவு ஒழுக்கம் ஊரார் அறியின் தலைவி உயிரோடிராள் ; அவளின்றி யான் வாழேன் ; ஆதலின், நீ பலர் அறிய மணத்தலை விரும்புகிறேன். நீ அப்போது புதியவன்போல் வரும் நின் வரவையும், தலைவி, மனத்தில் தோன்றிய நாணினால் ஒடுங்கியிருக்கும் ஒடுக்கத்தையும் யான் காண அவாவுகிறேன். ” (செ. 16)

தோழி தலைவனது துன்ப நிலையைக் கூறித் தலைவியை உடம்படுத்த முயலும் முறையும் அதற்குத் தலைவி கூறும் பதிலும் (செ. 24, 25) படித்துச் சுவைத்தற்கு உரியன.

பெருந்திணைப் பேச்சு

தலைவன்:- நின் உடல் புல்லற்கு இனிதா யிருந்ததாற் புல்லினேன்.

தலைவி:- தமக்கு இனியதென்ப தொன்றே கொண்டு, பிறர்க்கின்னாததைச் செய்வது இன்பந் தருமோ ? -

தலைவன்- தண்ணீரைப் பருகுவோர் தமக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/90&oldid=1390533" இலிருந்து மீள்விக்கப்பட்டது