பக்கம்:தமிழ் இனம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96 தமிழ் இனம்

(4) யானையும் புலியும் சண்டையிட்டபோது வண்டு, வேங்கைப்பூங்கொம்பென்று கருதி வேங்கையைச் சூழ்ந்தும், வேங்கைச் சினை என்று யானை முகத்தை அணுகியும் அலைந்து கொண்டிருந்த நிலைமை-போர் தொடங்கிய மன்னர் இருவரை நட்பாக்குவார், பலகாலும் இருவர்பாலும் போதலும் வருதலுமாகிய நிலைமையை ஒத்திருந்தது. (செ. 10)

(5) வறுமையுற்ற அறிவுடையோர் தமது நிலைமையைக் கூறி உதவிபெற விழைந்து அணுகி அவர்பால் அதனைக் கூறத் தொடங்கிப் பின்னை அதனை முடியச் சொல்லமாட்டா திருப்பாரைப் போல-தலைவன் தோழியிடம் தன் குறையை அறிவிக்கச் சென்று, அதனைக் கைவிட்டு அவளைப் பலகாலும் பார்த்தான் ; பின்னர் அவள் நோக்கத் தலைவன் மெத்தென தலையிறைஞ்சி நின்றான். (செ. 25)

(6) தலைவன் அருள் பொருத தலைவி :

(1) நீரற்ற வயலாளுள். (2) பொருள் இல்லான் இளமை போன்றாள். (3) அறம் சாரான் மூப்பே போன்றாள்.

(7) தலைவன் அருள் பெற்ற தலைவி :

(1) கார்பெற்ற வயலாளுள். (2) அருள்வல்லான் ஆக்கம் போன்றாள். (3) திறம்சேர்ந்தான் ஆக்கம் போன்றாள்.

(செ. 2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/93&oldid=1359737" இலிருந்து மீள்விக்கப்பட்டது