பக்கம்:தமிழ் இனம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



98

தமிழ் இனம்

(3) வீமன் துரியோதனன் குறங்கினை
    (தொடையை ) அறுத்து. (செ. 16)
(4) கண்ணன் மல்லரை அடக்கி வென்றது. (செ. 16)

8. குறிஞ்சிநிலச் செய்திகள்

1. ஆடவர் சிறந்த வீரர்; வில்லையும் கவண் கயிற்றையும் கொள்ளியையும் இரவில் ஏந்தித் தினைப்புனம் காவல் செய்வர்; விலங்குகள் வரும் ஓசை அறிந்து, ஓசை வருந்திசையே கல் விடுவர் (செ. 5) , தம் மகளிர் கற்புக்கடம் பூண்ட செய்தியறிந்ததும் முதலிற் கறுத்துப் பின் உடம்படுவர் (செ. 3); தாம் விரும்பிய பெண்ணைப் பெறாராயின், ஊர் மன்றத்தில் மடலூர்வர் (செ. 22); வேங்கை மரத்தடியில் இருந்து மணம் பேசுவர் (செ. 5); கண் ஏணியை அமைத்து ஏறித் தேன் கூடுகளை அழித்துத் தேன் எடுப்பர் (செ. 3); புலியை வலை கட்டிப் பிடிப்பர் (செ. 9).

2. இளமகளிர் தெருவில் மணல் வீடு கட்டி ஆடுவர் (செ. 15); மரத்தாற் செய்த பாவையையும் பானையையும் கொண்டு விளையாடுவர்; தைந் நீராடும் வழக்குடையர்; நோன்பெடுத்து வீடு தோறும் சென்று ஐயம் ஏற்றும், அதனை இரந்தோர்க்கு ஈந்தும், சிறுசோறு சமைத்து ஆயத்தார்க் கீந்தும் களிப்பர் (செ. 23); இளைய நகில் மீது தொய்யிற் கொடி போன்று எழுதிக் கொள்வர் (செ. 18); தோளில் கரும்பு போல எழுதிக் கொள்வர் (செ. 28); இப்பழக்கமே பிற்காலத்தில் பச்சை குத்திக்கொள்ளும் பழக்கமாக மாறியதென்னலாம். மகளிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/95&oldid=1394368" இலிருந்து மீள்விக்கப்பட்டது