பக்கம்:தமிழ் இனம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறிஞ்சிக்கலி

101

கீழ்வீழா; தேன் அடைகள் உண்டாகா; தினைகளும் கதிர்விடா.

(ii) “குறமகளிர் தத்தம் கணவரைத் தப்பாராய் அவரே தெய்வம் என்று வணங்கி எழுந்திருத்தலாலே, அவர் தம் ஐயன்மார் தாமும் வேட்டை தப்பார். (இனி அது தப்பும் போலும்)” (செ. 3)

2. கொடிச்சியர் தம் கரமிரண்டும் கூப்பித் தம் குறை தீர முருகனை வணங்கல் மரபு.

3. தலைவனைத் தலைவி பழித்துக் கூறுங்கால், தோழி தலைவனை உயர்த்திக் கூறலும் (செ. 5), தோழி பழித்துரைக்குங்கால் தலைவி தலைவனை உயர்த்திக் கூறலும் (செ. 6) குறமகளிர் பெண் தன்மையை உயர்த்திக் காட்டுகின்றன.

தலைவி, “தலைவன் அறம்புரி நெஞ்சத்தவன்; தன் மலை நீரினும் சாயல் உடையோன் ; நயந்தோர்க்குத் தேரைக் கொடுக்கும் வண்கையன்; அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன்; அவன் என் நெஞ்சம் பிணித்தவன் ஆவான் (செ.6),” எனத் தலைவனை இயற்பட மொழிதல் இன்பம் தருவதாகும்.

4. காதலன் செய்யும் கொடுமையைத் தலைவி தோழிக்கும் சேரிக்கும் ஆயத்துக்கும் அறிவியா திருத்தலும் உண்டு, தோழிக்கும் அறிவியாதிருத்தலே வியக்கற்பாலது. (செ. 8)

5. தலைவன் இயல்புகளைத் தோழி தலைவிக்குக் கூறுதல் சுவைதரத் தக்கது : “என்னைக் குறை யிரந்து நிற்கும் தலைவன். அதே சமயம் வலிய உலகத்தைப் பாதுகாப்பவன் போன்ற வலிமையும் உடையவன்; வல்லார் வாய்க்கேட்டு மெய்ப்பொருளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/98&oldid=1356859" இலிருந்து மீள்விக்கப்பட்டது