பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/186

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தமிழ் இலக்கியக் கதைகள்

வந்தார்கள். கேலி செய்து குத்திக் காட்டி அதை ஒரு பாட்டாகப் பாடிவிட்டுப் போகக் காளமேகப் புலவர் ஒருவரால் மட்டும்தானே முடிந்தது! -

62. புலவர் குறும்பு

திருநெல்வேலிச் சீமையில், தச்சநல்லூர் என்று ஒர் ஊர் இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் அந்த ஊரில் அழகிய சொக்கநாதப் புலவர் என்று ஒரு கவிஞர் இருந்தார். இருபொருள் படும்படியான சிலேடைப் பாட்டுக்களைப் பாடுவதில் திறமை மிக்கவர் அவர் நகைச்சுவை உணர்வும் வேடிக்கையாகப் பேசும் பண்பும் உள்ளவர் அவர் நிறையப் படித்து அறிவு முதிர்ந்தவர்களுக்கு நகைச்சுவையுணர்ச்சி குறைவு என்பார்கள். ஆனால் படித்தவர்களின் நகைச்சுவையில் உயர்தரமான அம்சம் இருக்கும்.

அந்த நாளில் அழகிய சொக்கநாதப் புலவருக்கு உதவிகள் செய்து பேணி ஆதரித்து வந்தவர் முத்துசாமிப் பிள்ளை என்னும் வள்ளல் ஆவார். ஒரு முறை அழகிய சொக்கநாதப் புலவர் முத்துசாமிப் பிள்ளையைச் சந்திக்கப் போயிருந்த போது, ஒரு சுவையான அனுபவம் அவருக்கு ஏற்பட்டது.

புல்வர் முத்துசாமிப் பிள்ளையைச் சந்திக்கச் சென்ற அதே சமயத்தில் அரைகுறையாக மிருதங்கம் பழகிய ஒரு மிருதங்க வித்துவானும் பிள்ளையவர்களைச் சந்திக்க வந்திருந்தார். பிள்ளைக்கோ எதையும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேயும் கலைஞர்களைக் கண்டால் பிடிக்காது. “ஐயா! மிருதங்க வித்துவானே! உங்களுடைய வாசிப்பைக் கேட்பதற்கு இப்போழுது எனக்கு நேரமில்லை. போய்விட்டு இன்னொரு சமயம் வாருங்கள், பார்க்கலாம்” என்று தட்டிக் கழிக்க முயன்றார் பிள்ளை.

“உங்களைப் போன்ற வள்ளல் இப்படிப் புறக்கணித்தால் என் போன்ற ஏழைக் கலைஞன் என்ன செய்ய முடியும்? தயவு