பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ் இலக்கியக் கதைகள்

அதை ஒர் அலாதி வேலையாகக் கருதிச் செய்வார். அந்தப் பாக்கு வெட்டியில் வெட்டிய சீவலை மென்று கொண்டே வெற்றிலையை நரம்பு உரித்துக் காம்பு கிள்ளிச் சுண்ணாம்பு தடவும் போதுகூட அவருக்கு அவ்வளவு சுகமாக இருக்காது. பாக்கு வெட்டியை எடுத்துச் சீவுவதில்தான் கொள்ளை ஆசை. வளர்ப்பானேன்! வெற்றிலை போடுவது அவருக்கு எவ்வளவு அவசியமோ அதைக் காட்டிலும் பன்மடங்கு அவசியத்திற்கும் ஆசைக்கும் உரிய பொருளாக இருந்தது அந்தப் பாக்கு வெட்டி!

உலக இன்பங்களை வெறுத்த ஞானிகள் பொன்னையும் பொருளையும் மண்ணையும் பெண்ணையும்தான் துறப்பதற்குரிய பெரும்பொருள்களாகக் கூறுகிறார்கள். ஆசாபாசங்களில் சிக்கி உழலும் சாதாரண மனிதர்களில் பெரும்பாலோர் இவைகளெல்லாம் அல்லாத சில சாதாரணப் பொருள்கள் மீதும் இவைகளின் மேல் உள்ளதைக் காட்டிலும் மிகுதியான பற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையைச் சேர்ந்ததுதான் வெற்றிலை போடுவதில் தொடங்கி அதன் சாதனமாக வந்த பாக்கு வெட்டியில் கவிராயருக்கு ஏற்பட்ட இந்த அளவு கடந்த காதல். காரண காரியத் தொடர்பு கற்பிக்க முடியாதது அல்ல. விறகு வெட்டிக்குக் கோடரியும், சமையற்காரிக்கு அரிவாள்மணையும் சாதனங்கள்தாம். ஆனால் அவைகளைப் பற்றுடன் போற்றிப் பேணுவதாகச் சொல்லிவிட முடியாது. பேணுவார்களேயானால் அது பொருளின் அருமையை உணரத்தக்க, ‘அது கிடையாமற் போதல், கைதவறிப் போதல்’ ஆகிய சந்தர்ப்பங்களிலேதான் இருக்கும். இந்த உதாரண விஷயம் காரண காரியத்தொடர்புடையது. ஆனாலும் புலவருக்குப் பாக்கு வெட்டியின் மேலிருந்த காதல் இந்தத் தொடர்பின் குறுக்கமான எல்லையைக் காட்டிலும் பெரியதுதான். ஒருவகைப் பிரமையோடு கூடிய பற்று.

இந்த நிலையில், அந்தப் பாக்கு வெட்டியை இழந்து விட்டால் கவிராயர் என்ன பாடுபடுகிறார் என்று பார்க்கவிரும்பிய சிலர் அதை ஒரு நாள் அவருக்குத் தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துவிட்டனர். கை ஒடிந்து விட்டதுபோலத் திண்டாடினார் கவிராயர்.அன்று முழுவதும் அவருக்கு ஒன்றுமே