பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ் இலக்கியக் கதைகள்

சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்
கரப்பாடு யான் கேட்பப் பொன் ஆடு ஒன்று ஈந்தான்
இரப்பவர் என்பெறினும் கொள்வர் கொடுப்பவர்
தாமறிவார் தம் கொடையின் சீர்

சிரப்பால் = தலையில், மணமவுலி = அழகிய கிரீடம், சீர் = பெருமை

என்று ஒளவையாரே இதைப் பாடியுள்ளார்.

23. படைத்தவன் குற்றம்!

ளமையில் விரும்பி விரும்பிப் படித்த தமிழின் பயன் எவ்வளவு வேதனை நிறைந்தது என்று இப்போதல்லவா தெரிகிறது! வளம் நிறைந்த வாழ்வுக்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. ஆனால் தமிழைப் படித்த ‘குற்றத்திற்காகவும்’ நாலு பாடல்களைப் பாடத் தெரிந்ததற்காகவும் அந்த வளங்களெல்லாம் நம்மைப் புறக்கணிக்க வேண்டுமா என்ன? தமிழ்த் தாய்க்கும் திருமகளுக்கும் நிரந்தரமாக நிலைத்துவிட்ட பகை ஏதாவது இருக்கிறதோ என்னவோ? வாழ்க்கை வசதிகள், குறைந்தபட்சம் உண்ணவும் உடுக்கவும் போதிய அளவுகூட இல்லையானால் கற்றும் கவிபாடியும் காணும் பயன் என்னதான் வேண்டிக் கிடக்கிறது? இப்ப்டிப்பட்ட வேதனை கவிந்த நினைவுகளோடு கால் போன போக்கில் அந்த நீண்ட சாலையில் இராமச்சந்திர கவிராயர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவருடைய புலமையுள்ளம் மென்மையானது. மெய்யான திறமையை ஏமாற்றுபவர்களின் அலட்சியத்தைத் தாங்கிக் கொள்ளக்கூடிய அவ்வளவு வன்மை அவருக்கு அந்த உள்ளத்தில் எப்படி ஏற்பட முடியும்? இரண்டொரு நாட்களாக உணவு கண்டறியாத தளர்ச்சியில் நடை கூடத் தள்ளாடியது. தொடர்ந்த ஏமாற்றத்தின் வரிசை வரிசையான அனுபவங்கள், தம் பேரிலும், சொல்லப் போனால் தாம் கற்றுத் தொலைத்த தமிழின் மேலும்