பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26. ஆற்றில் நழுவிய ஆடை

உடலுக்கும் நெஞ்சுக்கும் ஒருங்கே குளிர்ச்சியையும் மலர்ச்சியையும் கொடுக்கும் வைகறைப் போது. வைகை நதியின் கரையில் ஒரே கோலாகலக் காட்சிகள். ஆடிப்பெருக்கு நேரம், முதலில் நான்கு ஐந்து நாட்களில் கலங்கலாக ஓடிய தண்ணிர்கூட இப்போது நன்றாகத் தெளிவடைந்திருந்தது. குளிக்க வருவோரும் போவோருமாகப் படித்துறைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வைகையில் எல்லாச் சமயங்களிலும் அவ்வளவு வெள்ளம் வந்து காண முடியாது. எப்போது வைகையில் ஆழ நீர் ஒடுகிறதோ அப்போது, அந்த நாட்களில் மதுரைப் பெருமக்கள் அதனைப் பயன்கொள்ளாமல் விட்டுவிடுவதில்லை. இதனால் தான் அவ்வளவு கூட்டம்.

இப்படிப் புதுவெள்ளம் போய்க் கொண்டிருந்த நாட்களில் ஒன்றிலேதான் மதுரைக்குத் தற்செயலாக வந்திருந்தார் ஒப்பிலாமணிப் புலவர்.ஆடிப்பெருக்கும் அதுவுமாக, வைகையில் நல்ல தண்ணிரும் ஒடும்போது வேறு எங்கேனும் குளித்துவிட அவருக்கு மனம் வரவில்லை. “ ‘அரை வேஷ்டியை நன்றாகத் துவைத்து, அலசி, உடற்சூடு தீர வைகையில் மூழ்கிக் குளிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு பல பலவென்று விடிய இருக்கும் நேரத்தில் வைகைக் கரைக்கு விரைந்து வந்து சேர்ந்தார் புலவர்.

சுற்றிச் சுற்றிப் பார்த்தாலும் ஒரு படித்துறையிலாவது சாவகாசமாக நின்று குளிப்பதற்கு இடம் கிடையாது. எல்லாத் துறைகளிலுமே அதிக நெருக்கடியாக இருந்தது. ஆடவரும் பெண்டிருமாகத் தத்தம் அவசரத்தில் விரைவாக நீராடிச்செல்லும் கருத்துடன் துறைகளிலுள்ள இடங்களைப் பலாப் பழத்தை ஈ மொய்ப்பதுபோல் மக்கள் நெருங்கி மொய்த்துக் கொண்டிருந்தனர். நெடுநேரம் காத்திருந்த பிறகு, பக்கத்திலிருந்த ஒரு படித்துறையில் சற்றே கூட்டம் குறைந்து காணப்பட்டது. வசதியாகக் குளிக்கலாம் என்ற அளவிற்கு அங்கே கூட்டம்