பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii கூறிய ஆசிரியர் அதற்குத் தக வள்ளுவரது வாய்மொழியை விளக்கியிருப்பது சாலப் பொருந்தும்(பக். 165). மழித்தலும் நீட்டலும் என்பதைப்பற்றிக் குறிப் பிடும்போது தமக்குத் தெரிந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறி யிருக்கும் பாங்கு ஆசிரியரின் நகைச்சுவையுணர்வையும், இத்தகைய வழக்கங்களில் அவருக்கு நம்பிக்கையின்மை யையும் புலப்படுத்துவன(பக். 168-69). ಕು 'நீதி' என்ற பகுதியில் தொடக்கத்திலேயே அறத் திற்கும் நீதிக்கும் உள்ள வேற்றுமையைத் தெளிவுபடுத்தி விடுகின்றார்(பக். 218). புறநானூற்றுக் காலத்தில் மன்னனை உயிராகவும் மக்களை உடம்பாகவும் காட்டப்பெற்ற கருத்து, கம்பன் காலத்தில் தலைகீழாகமாறி மக்களாட்சிக்கு வித்து நடப்பெற்றது. அத்தகைய நிலையிலிருந்து ஆட்சி செய்யும் மன்னனின் செங்கோன்மையைப்பற்றி இக்கால நடைமுறையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார் ஆசிரியர் (பக். 224-225). "நீதி நெறி வழுவாது ஆட்சிபுரிந்த மூவேந்தரது வரலாறுகளின்று தக்க நிகழ்ச்சிகளை ஆசிரியர் கூறுகிறார் (பக். 232, 235, 248). - தமிழக வேந்தர் நீதி வழங்கிய முறையையும், அதன் பால் அவர்கள் கொண்டிருந்த ஊற்றத்தையும் ஆசிரியர் தக்க மேற்கோள்களுடன் புலப்படுத்துகிறார். - கொலைத்தண்டனை கூடாது' என்றும், சிற்சில இடங்களில் அது தேவை என்றும் இருவேறு கருத்துகள் நிலவும் சூழ்நிலையில் மேனாட்டு அறிஞர் வாய்மொழிப் படி திருந்தத் தக்கவர், திருந்தாதவர் என இரு பகுப் புடைய கொலைஞருள் பிற்பகுதியினருக்குக் கொலைத் தண்டனை சாலும் என்று கூறும் ஆசிரியர், அண்மைக் காலத்தில் நிகழ்ந்த இருபெருங் கொலைக் குற்றங்களைச்