பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை என்றுவிளக்குவான். தந்தைக்கு மைந்தன் நாராயண நாமத்தை விளக்குவது இத்திருப்பாடல். திருமூலர் அன்பைச் சிவத்துடன் ஒற்றுமைப் படுத்திப் பேசுவர். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்ப்ே சிவமாவ தாகும் அறிகிலார்’ என்று அவர் திருவாக்கைக் காண்க. அன்புக்கும் தன்னலத்திற்கும் தொடர்பு உண்டு. அன்பு குறையக் குறைய தன்னலம் பெருகும்.அன்பு பெருகப் பெருகத் தன்னலம் தேயும். அன்பற்றவர்கள் தன்னலம் மிக்கவர்களாக இருப்பதை வாழ்க்கையில் காணலாம். அவர்கள் எல்லாப்பொருள்களும் தம் நன்மைக்காகவே இருப்பதாகக் கருதுவதையும் பார்க்கலாம். அன்புமிக்கவர் கள் தன்னலம் இன்றி எல்லாப் பொருள்களையும் பிறர் நன்மைக்காக இருப்பதாகக் கொள்வதையும் நாம் கான முடிஇன்றது. தம் உயிர்வாழ்க்கைக்குக் காரணமான உடம்பில் உள்ள எலும்பும் பிறர் நன்மைக்காக இருப்ப தாகவே கருதுவார்கள் இவர்கள்; “தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கையைக் கடைப் பிடிப்பவர்கள். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (72). என்பது வள்ளுவம். பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்கு வாழைமரமே சிறந்ததோர் எடுத்துக்காட்டாகத் திகழ் கின்றது. வாழைமரம் குலை விடுகின்றவரை வாழ்கின்றது. பின்பு அது வீழ்கின்றது. குலை விடுவதற்காகவே அஃது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வருகின்றது. அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன் கடமை தீர்ந்ததாகவும் 78. திருமந். 270,