பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 83 தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து தன் உயிர் வாழ்க்கையை முடித்துக் கொள் கின்றது. இங்ங்ணம் வாழ்வின் ஒரே நோக்கமாய், ஒரே தடவையாய், ஒரே குலையை வழங்கிவிட்டு உயிர்விடுகின்ற இந்நிகழ்ச்சி மிகவும் உருக்கந் தருவதாகும். இந்த ஒரே குலையையும் தனக்காகவோ தன் கன்றுகளுக்காகவோ ஒருசிறிதும் வைக்காமல் முழுதும் பிறர்க்காகவே வழங்கி விடுகின்றது. தன் உடலின் நடுத்தண்டையும் பிறர்க்கே உரியதாக்கி விட்டு மறைந்து விடுகின்றது. என்பும் உரியர் பிறர்க்கு’ என்னும் உயரிய பண்புக்கு மனிதர்களில் எல்லோரும் இப்படியுள்ளனரா? ஆனால் வாழைகள் யாவுமே இப்படிச் சால்பு நிறைந்தனவாய் உள்ளன! இந்நிலையில், ஆண்டவனும் அன்பு வலைக்குள் அகப்படுவான் என்பதை வள்ளற்பெருமான், அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே! அன்பெனும் குடில்புகும் அரசே! அன்பெனும் வலைக்குள் படும்பரம் பொருளே! அன்பெனும் கரத்தமர் அமுதே! அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே! அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே! அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே! அன்புரு வாம்பர சிவமே.”. என்று பாடுவர். அன்பினால் வளர்வது விருப்பம். அது நட்பு என்னும் அருஞ்சிறப்பைத் தேடித் தரும். அதனால் உலகில் தனித்து வாழ்ந்து துன்புறும் நிலைமை நீங்கும். அன்புடைய பலர்க்கிடையில் வாழும் பெருமையும் வாய்க் கும். உலகில் இன்பமாக வாழும் பேறு பெற்றவர்கள் அடைந்துள்ள சிறப்புக்குக் காரணம் இதுதான்; இவ்வாறு 79. ஆறாம் திருமுறை - பரசிவ வணக்கம்.