பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&金 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை அன்பு பொருந்தி வாழும் வாழ்க்கையே இதற்குக் காரண மாகும். - அன்பினும் ஆர்வ முடைமை; அதுசனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு(74) அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு (75) நெஞ்சம் நெகிழ்ந்து இயைந்து வாழ்வதற்கு அன்பு துணையாக அமையும் என்பதைக் காண்கின்றோம். எங்கோ பிறந்து வளர்ந்த ஒருவனும் எங்கோ பிறந்து வளர்ந்த ஒருத்தியும் அன்புடன் நெஞ்சம் கலந்து இணை கின்றனர்; இந்தக் கலப்பு பின்னர் இல்லற வாழ்க்கை யாக மாறுகின்றது. - யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தான்கலந் தனவே." (யாய் - என்னுடைய தாய்; ஞாய் - நின் தாய், புலம் - வயல், நிலம்) என்ற குறுந்தொகையில் தலைவன் - தலைவியின் இணைப்பு பைக் காண்கின்றோம். இங்குச் செம்புலப்பெயல் நீர் போல் அன்புடையார் கலக்கின்றனர். அதுவும் அவர்தம், இல்வாழ்க்கையை அமைக்கின்றது. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது (45) என்றன்றோ வள்ளுவர் கூறிப் போந்தார்? நரிவெரூஉத்தலையார் என்ற புலவர் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் இரும்: சேரமான் 80. குறுந் 40