பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 85 பொறையை நாடிப் பரிசு பெற்று வறுமை நிலைமை மாறி பண்டைய நிலையை அடைகின்றார். இந்தச் சேரமான் சிறந்த மெய்ப் பொலிவுடையவன். தன்னைக் கண்டார்க்கு நலம் செய்யும் இவனது தோற்றச் சிறப்பு, நரிவெரூஉத்தலையாருக்கு உற்ற மெய் வேறுபாடு. இவனது காட்சியால் பண்டைய நலத்தை அடைந்தது என்பர். இவனது தோற்றப் பொலிவை வியந்து, தனக் குக் செய்தது போலப் பிறர்க்கும் இன்பம் செய்யும் இயல்பு குன்றாதிருப்பது காரணமாக, இத்தோற்றப் பொலிவு செல்வக் குறைவாலும், சிற்றினச் சேர்க்கை யாலும் மக்கள்பால் அளியின்மையாலும் குன்றுமென நினைத்து, அருளும் அன்பும் நீங்கி நீங்கா நிரயம் கொள்பவரொ டொன்றாது காவல் குழவி கொள்பவரின் ஒம்புமதி - அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே' (நிரயம் - நரகம்: ஒம்புமதி - பாதுகாப்பாக). என்று அறிவுறுத்துகின்றார். 'பெரும! நீ கானக நாட னாதலால் செல்வக் குறைவில்லை. ஆதனால் நீ நிரயம் கொள்ளும் சிற்றினத்தைச் சேராது நாட்டினைக் குழவி வளர்ப்பாரைப்போல பாதுகாப்பாயாக' எனத்தெருட் குவதைக் காணலாம். இல்வாழ்வானுக்கு அன்போடு அருளும் இருக்க வேண்டும் என்பது இதனால் அறிகின் றோம். - அன்பு இல்லாத உயிர், வாழ்க்கைக்கு உரிமை இல் லாத உயிர் என்று சொல்லலாம். எலும்பு இல்லாத உடம்பு வெயிலில் திரிவதற்கு உகந்ததன்று; அதை வெயில் அழிப்பது போல, அன்பு இல்லாதவரை அறம் அழிக்கும். உயிர் வாழ்க்கைக்கு இடம் பொருள் முதலிய வசதிகளும் 81. புறம்-5