பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை வாய்க்க வேண்டும். ஆனால் அன்பு மட்டிலும் இல்லை யாயின் இவற்றால் யாதொரு பயனும் இல்லை. அன்பு அடிப்படையாக வாழும் உடம்பே உயிர் நின்ற உடம்பு; அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்திய உடம்பு; உயிருடன் வாழ்ந்தும் பயனற்ற உடம்பு; அதனை உயிரற்ற பிணம் எனலே பொருந்தும் என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் (77) அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு (80) என்ற வள்ளுவங்கள் இவற்றை விளக்குகின்றன. நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்வதற்கு அன்பு இன்றியமை யாதது என்று கண்டோம். அது மட்டும் அன்று; ஒரு சிலர்மீது பகை கொண்டு ஒருவன் செய்யும் வீரச்செயல் கட்கும் அன்பே காரணம் ஆகின்றது. மனைவியிடம் உள்ளம் கலந்து வாழ்கின்ற அன்புடையவன் அவளைக் காப்பதற்காகக் கொடியவர்களை அஞ்சாமல் எதிர்க்கின் றான். குழந்தையிடம் அன்புடன் கொஞ்சும் தாய் கொடிய விலங்கினிடமிருந்தும் அதனைக் காக்க அஞ்சாமல் போரிடு கின்றாள். வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திராமல் மெல் வியலாய் வாழ்ந்த கண்ணகி கணவனுடைய புகழைக் காப்பதற்காக நாடாளும் வேந்தனையும் சீறி வழக்கு ரைக்கின்றாள். இங்ங்னம் நெஞ்சை நெகிழ்விக்கும் அன்பே நெஞ்சை வன்மையுறச் செய்து இரும்பாகி பகைக்கவும் எதிர்க்கவும் அழிக்கவும் ஆற்றல் அளிக்கின்றது. இதனால் நாம் அறியும் உண்மை என்ன? அறத்திற்கு மட்டுமே அன்பு துணை என்று சிலர் சொல்வது அறியாமை; மறத் திற்கும் அதுவே துணையாகும். அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்; மறத்திற்கும் அஃதே துனை (16)