பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 87 என்பது பொய்யாமொழி. அன்புக்குக் கண்ணப்ப நாய னாரை எல்லை நிலமாகக் கொள்வர் மணிவாசகப்பெரு மான். (திருவா. திருக்கோத்தும்பி-4) மூன்றாவது பகுதியில் விருந்தோம்பல், இனியவை கூறல், செய்ந்நன்றி அறிதல், ஒப்புறவு அறிதல் ஈகை என்ற செயல் நலங்களை விளக்கும் ஐந்து அதிகாரங்களில் உள்ள கருத்துகளை விளக்குவேன். இல்வாழ்வானுக் குரிய இந்த கடமைகள் யாவும் ஒன்றோடொன்று தொடர் புடையவை என்பதை இந்த விளக்கத்தில் கண்டு தெளிய லாம். ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம். 1. விருந்தோம்பல்: இல்லறத்தின் ஒரு சிறந்த கூறு விருந்தோம்பல் என்பது. இல்லற வாழ்க்கையில் துன்பம் மிகுதி. வீடு அமைத்துக் கொண்டு நாளைக்கு எனப் பல பொருளும் தேடி வருந்தி அவற்றைக் காத்துக் கவலை யுறுவது இல்வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் துன்பத்திற் கேற்ப நன்மையும் இருக்க வேண்டும் அல்லவா? இந்த நன்மைதான் புதியராய் வந்தவர்க்கு உதவி செய்து வாழும் நன்மையாகும். இதனைச் சிறந்ததோர் அறம் என்று கூறுவர் வள்ளுவப் பெருந்தகை. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு (81) என்பது அவருடைய திருவாக்கு. திருவள்ளுவர் கூறும் விருந்து இக்காலத்தில் நாம் விருந்து என்று கருதுவத் னின்றும் முற்றிலும் வேறுபட்டது. இக்காலத்தில் பல் காலும் பழகி அறிந்தவர்க்குச் சிறந்த உணவு அளிக்கின் றனர். தம்மை விடச் சிறந்த செல்வமுடையவர்க்குப் புகழ் கருதிப் போற்றி ஆடம்பரமாகச் சிறப்புச் செய்கின் றனர். ஏதேனும் நன்மையை எதிர்பார்த்து அதற்காக ஒருவர்க்குச் சிறந்த உணவு நல்குகின்றனர். இதற்காகச் சிலர் மூன்று - நட்சத்திர, ஐந்து - நட்சத்திர உணவு விடுதி