பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை களில் விருந்து அமைத்துப் போற்றுகின்றனர். இதனை இக்கால மக்கள் விருந்து எனக் கருதுகின்றனர். திபா வ்ளி அல்லது பொங்கல் திருநாளுக்குப் பெரிய பட்டுத் துணி கடைகட்குச் செல்லும்பொழுது காஃபி அல்லது தேநீர் வணிகரால் வழங்கப்படுவது போன்ற வாணிக விருந்து இது. திருவள்ளுவர் கூறும் விருந்து இக்காலத்தில் நாட்டுப்புறங்களில், பட்டி தொட்டிகளில், மூலைமுடுக் குகளில், ஏழைகளாய் வருவோர்க்கு வேளாண் மக்கள் கூழ் வார்க்கும் உதவியில் காணலாமேயன்றி உணவு விடுதி கள் மவிந்த நகரங்களில் காண முடியாது. கணவனும் மனைவியும் அலுவல் பார்க்கும் இல்லங்கட்கு நேரம் தவறி வருவோரை தொல்லை தருவோராகக் கருதும் மனப்பான் மையையும் இன்று காண முடிகின்றது. காலையில் பிள் ளைகளைக் குளிப்பாட்டி, ஆடை புனைந்து உணவூட்டிச் சிற்றுண்டியுடன் பள்ளிக்கனுப்பும் பணியில் ஈடுபட்டிருக் கின்ற்ாள் இல்லத்தலைவி. கணவர் உணவருந்தி அலுவல கத்திற்குப் போகத் தயாராகின்றார். இவரை அனுப்பிய பிறகு உணவு கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு தானும் அலுவலகத்திற்குப் போக வேண்டும். இங்ங்னம் ப்ரபரப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது, தாம் பிறந்த குக்கிராமத்திலிருந்து நீதிமன்றத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் ஒருவழக்கின் நிழித்தம் உறவினர் ஒருவர் இவர் வீட்டில் தங்குவதற்கு வந்தால், அவரை எப்படிக் கவனிக்க முடியும்? எங்ங்னம் விருந்தோம்ப முடியும் விருந்தோம்பும் பண்பு இந்த இல்லறத்தாருக்கு இல்லையென்று சொல்ல முடியுமா? வள்ளுவர் பெருமான் வாழ்ந்த காலம் அமைதியான காலம் பரபரப்பே இல்லாத காலம். உணவு விடுதிகளும் தங்கும் விடுதிகளும் இல்லாத காலம். தவிர பண மாற் றும் ஆத்தாலத்தில் இல்லை. வெளியூர்க்குச் செல்வோர் புலு நாட்களுக்கு வேண்டிய கட்டமுதைக் கையில் கொண்டு இசல்ல முடியாது; புலதிங்களுக்கு வேண்டிய அரிசி முதலி