பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் & 9 யவற்றைக் கொண்டு செல்லவும் முடியாது. பெரிய பிரபுக் கள், செல்வர்கள் இவர்கள் சொந்த ஊர்திகளில் செல் லும்போது மட்டுமே அவ்வாறு உணவுப் பொருளை உடன் கொண்டு செல்ல முடிந்தது. ஏனையோரால் அவ்வாறு கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால் அக்காலத்தில் விருந்தோம்பல் ஊர்தோறும் இன்றியமை யாத அறமாகப் போற்றப் பெற்று வந்தது. தாம் வெளி யூர்க்குச் சென்றபோது பட்ட துன்பத்தை நினைந்து அவ்வாறு தம்மூர்க்கு வருவோர் வருந்தக் கூடாது என்று உணர்ந்து இந்த விருந்தோம்பல் அறத்தை மக்கள் பெரி தாகப் போற்றி வந்தார்கள். இக்காலத்தில் நாம் விருந்து' என்று போற்றப்படு வதற்கும் இந்த அறத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இக்காலத்து விருந்து எனப்படுவது வறியாரை மறப்பது; செல்வரை ஒம்பு வது ஆடம்பரத்தைப் போற் றுவது; பயனை எதிர்நோக்கி வாணிக முறையில் செய்வது. பசித்தவர் முகம், திக்கற்றவர் முகம் ஆகியோரை இன் முகத்துடன் வரவேற்று அன்புடன் போற்றி உதவுவதைக் கடமை என்று உணர்ந்து செய்யும் அறத்தையே உண் மையான விருந்து என்று போற்றத்தகும். பழகியவர் களை அன்போடு வரவேற்று உணவளிக்கும் வழக்கத்தை அதற்கடுத்த நிலையில் வைத்துப் போற்றும் அறம்ாகக் கருதலாம். விருந்து என்னும் பண்பு தமிழனுக்கு உரியது. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து (90) என்ற இலக்கணமறிந்து செயலாற்றுவான் அவன். விருந் தினர் வீட்டின் புறத்தில் இருக்கத் தான்மட்டும் உண்னும் சிறுமதி கொண்டவனல்லன் தமிழன். சாவா மருந்தாகிய அமிழ்தமே யானாலும் விருந்தினரை விட்டுத்தான் மட்டி