பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் (விடர் - பிளவு) என்ற புறப்பாட்டால் இதனை அறிகின்றோம். இக்கருத் தையே, உண்டா லம்மஇவ் உலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே." என்ற கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதியின் பாடல் பகுதியாலும் அறிய முடிகின்றது. முகம் மலர்ந்து அளிக்கும் விருந்துபற்றியும் முகம் இரித்து அளிக்கும் விருந்து பற்றியும் பிற்காலக் கவிஞ ரொருவர், ஒப்புடன் முகம லர்ந்து உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட் டாலும் உண்பதே அமிர்த மாகும்; முப்பழ மொடுபால் அன்னம் முகம்கடுத் திடுவா ராயின் கப்பிய பசியி னோடு கடும்பசி ஆகும் தானே' என்று பாடியிருப்பது மேற்குறிப்பிட்ட திருவள்ளுவரின் மோப்பக் குழையும்' என்ற குறள் மணியின் கருத்தை யொட்டியே பாடியிருப்பதாகக் கருத முடிகின்றது. 'இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை" என்பது ஒளவைப் பாட்டியின் திருவாக்கு. அறுசுவை. உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட அந்த உண் டிக்கே ஒரு தனிச்சுவை உண்டு. உண்ணும் போது 83. புறம் - 182 84. விவேக சிந்தாமணி-7 85. 'வாக்குண்டாம்-21