பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை உண்டி பரிமாறுவதற்கு மனைவி வேண்டும். ഥഒ് ഒ്ഖി யுடன் இல்லறத்தில் வாழ்பவனே துணை என்பதை, துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை (42) என்று உரைப்பார் வள்ளுவப் பெருந்தகை. இவற்றை யெல்லாம் அசோக வனத்தில் அரக்கியர் கூட்டத்திடையே வருந்தியிருக்கும் சீதையின் மனம் எண்ணுகிறது. அருந்து மெல்லட(கு) ஆர்இட அருந்தும்என் (று) அழுங்கும்; விருந்து கண்டபோ(து) என்னுறு மோ என்று விம்மும்." (மெல்அடகு - மென்மையான இலை உணவு; இட - பரிமாற; அருந்தும் - அமுதுசெய்வார்; அழுங்கும்-வருந்து வாள்; விருந்து - விருந்தினர்; என உறுமோ - என்ன துன் பப்படுவாரோ; விம்மும் - அழுவாள்) என்று சீதாப்பிராட்டி மனம் கவல்கின்றாள். 'அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அல்லவா? இப்படியெல் லாம் எண்ணிக் கவல்பவள்தான் தருமபத்தினி நிலைக்கு உரியவளாகின்றாள். இதனால்தான் வள்ளுவப் பெருந் தகை மங்கலம் என்ப மனைமாட்சி (60) என்று வாழ்க் கைத்துணை நலத்தினைச் சிறப்பித்தார் போலும். நம்காலத்தில் வாழ்ந்த டி. கே. சி. அவர்கள் விருந்தோம்பலில் புகழ் பெற்றவர். இலக்கிய விருந்து ஒருபுறமிருக்க, வயிற்றுக்கும் வாய்க்கும் அளிக்கும் விருந் தும் ஒப்பற்றது. எந்த வேளையில் எத்துணை பேர்கள் க்ள் எதிர்பாராத விதமாக டி. கே. சியின் இல்லறத்திற் குப் போனாலும் அத்தனை பேரையும் மரியாதை நிறைந்த மனப்பூர்வமான, மலர்ந்த முகத்தோடு வரவேற்று, அவர் 86. சுந்தர காட்சி.15