பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் - அறம் 93 களை விருந்தோம்பி உபசரிக்கும் அற்புத இயல்பு டி.கே.சி. யின் பிறவிக்குணம். பழகினவர்கள் பழகாதவர்கள் என்ற் வேறுபாடின்றி டி.கே.சி. அவர்களை சாப்பிட வேண்டு கிற முறை மிகவும் சிறப்பானது; அழகான்து. இல்ை போடச் சொல்வதும், விருந்தின்ர்களைப் பொருத்தமான முறையில் உட்கார்வைப்பதும் டி.கே.சி.யிடம் நாம் படிக்க் வேண்டியவை. அனைத்தையும் தாமே நேரில் கவனிப் பார்கள். டி.கே.சியின் துணைவியார் இத்தனைக்கும் ஒத்துக் கொடுத்தது மிகவும் பாராட்டத்தக்கது. குறுந் தொகைத் தலைவன் ஒருவன் பரத்தையிற் பிரிகின்றான். தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி இழிவுக் குறிப்புத் தோன்றத் தலைவன் ஒழுகலாற்றினை எடுத் துரைக்கின்றாள். இதுமற் றெவனோ தோழி துணியிடை இன்னார் என்னும் இன்னாக் கிளவி இருமருப் பெருமை ஈன்றிணிைக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅற் பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய எமக்கே’’’ (துணியிடை - புலவிக்காலத்தே, இன்னாகிளவி இனிமை இல்லாத சொல்; இருமருப்பு - பெரியகொம்பு; காரான் - எருமை: பாஅல் - பக்கத்திலுள்ள குழவி-கன்று: ஆரும் - மேயும்) - என்ற பாடலில் இதனைக் காணலாம். த்லைவன் பரத் தை பால் சென்றிருந்த காலத்தில் தலைவி ஆற்றாமை யுடையவளானாள்; அப்பொழுது தலைவனுடைய பரத் தமையை எடுத்துக் கூறின் அவள் தன் துயர்க் காரண மறிந்து கூறுகின்றாள் என் ஆற்றியிருப்பாள் என்று எண்ணிய தோழி, இன்னார் என்னும் இன்னாக்கிளவி" 87. குறுந். 181