பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை யால் தலைவன் ஒழுகலாற்றை எடுத்துரைத்தாள். தான் தன் அன்புடைமைமையினால் ஆற்றாளாயினும் பிறர் தன் தலைவனது குறையைக் கூறப்பொறாத கற்புடையாளா தலின் தலைவி அவளை நோக்கி அவரோடு புலந்து உறையும் இக்காலத்தில் அவரைப் பற்றிக் குறை கூறுவ தனால் பயன் ஒன்றும் இல்லை. இல்லறம் நடத்தும் பெண் டிராகிய நாம் செய்யக் கடவதான அறங்கள் பல உண்டு; இன்பம் ஒன்றையே பெரிதாகக் கருதும் இளமையையும் நாம் கடந்து முதுமை எய்தினோம். ஆதலின் தலைவர் எங்ங்னம் இருப்பினும் நம் கடப்பாடுகளை நாம் செய்தல் சாலும்' என்று கூறினாள். 'அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண் பிறந்தோர்க்குப் பொறையே பெருமை”* என்று பெருங்கதைக் கூற்றை ஈண்டு நாம் நினைக்கின் றோம். எருமை, உழவனால் கட்டப்பெற்ற தன் குழவி யினின்றும் அகலாமல் அருகேயுள்ள பயிரை ஆரும் ஊரன் என்றது, தலைவன் இல்லின்கண் உறையும் தலைவிபால் கொண்ட அன்பு குறையாமல் தனக்கு வேண்டிய இன் பத்தை அருகிலுள்ளாற்பால் பெறுகின்றான் என்ற குறிப் பைப் புலப்படுத்துவது. இந்தக் குறுந்தொகைப் பாடலில் காட்டப்பெறும் தலைவி கற்புக்கடம் பூண்ட கண்ணகியையொத்தவள். மதுரையில் கோவலன் சிலம்பை எடுத்துக் கொண்டு விற் பதற்குப் போகுமுன் கண்ணகியை நோக்கி தன் கழிந்த வாழ்க்கையை நினைந்து இரங்கிக் கூறுகின்றான். வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி, நெடுநகை புக்கு பொச்சாப் புண்டு பொருள் உரை யாளர் நச்சுக் கொன்றேற்கு நல்நெறி உண்டோ? 88. பெருங்கதை. 4. 14 : 98 - 99.