பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 9.5 இருமுதுக் குரவர் ஏவலும் பிழைத்தேன்; சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் வழு எனும் பாரேன்; மாநகர் மருங்குஈண்டு எழுகஎன எழுந்தாய்; என்செய்தனை" (வறுமொழியாளர் - பயனில் சொல்வார்; வம்ப-புதிய, குறுமொழி - சிறுசொல்; கோட்டி - கூட்டம்; பொச் சாப்பு - மறவி; இருமுது குரவர் - தாய் தந்தையர்; சிறிமுதுக்குறைவி - கண்ண்கி; வழு - குற்றம்) என்பது அவன் பேச்சு. அப்போது கற்பில் சிறந்த கண்ணகி, அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும் துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்க் கோடலும் இழந்த என்னை' என்று இல்லக் கிழத்தியின் கடமைகளை எடுத்துக் கூறு கின்றாள்; இவைதாம் குறுந்தொகைத் தலைவி திரு மனைப் பல கடம்' என்று கூறியதில் அடங்குபவை. விருந்தோம்பலில் இல்லத்தரசி இணைந்து செயல் படாவிட்டால் இவ்வறச் செயல் சரியாக நடைபெறாது: நடைபெறவும் முடியாது. ஒளவையார் பாடலொன்றில் குறிப்பிடப்பெறும் நிகழ்ச்சியொன்று இதற்கு எடுத்துக் காட்டாக அமையும். இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்.' என்ற பாடலில் எழைக் குடியானவன் மேற்கொண்ட விருந்தோம்பல் சித்திரிக்கப் பெற்றிருப்பதைக் கண்டு 89. சிலப் - கொலைக்களக் காதை - அடி 63-70 90 டிெ - 71 - 73 91. தனிப்பாடல்