பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை மகிழலாம். இன்றைய மேட்டுக்குடி மக்களைச் சார்ந்த சில குடும்பங்களிலும் இல்லத்தரசிமார்கள் விருந்தோம்ப லில் தடைக்கற்கள் போடுவதை நான் நன்கு அறிவேன். 2. இனியவை கூறல் : அன்பு கலந்தனவாய், வஞ்சனை யற்றவைகளாய், மெய்ப் பொருள் உணர்ந்தவர்களின் வாயில் பிறக்கும் சொற்கள் இன் சொற்களாகும் (91) விருப்பத்துடன் முகம் மலர்ந்து இன் சொல் கூறும் தன்மை இருந்தால், அது மனம் உவந்து பொருளைக் கொடுத்து உதவுவதை விட நல்லது (92). ஒருவரைக் கண்டால் முகத்தில் விருப்பம்,தோன்ற இனிமையாக நோக்கி, மனம் கல்ந்த இன்சொல் கூறவதே அறநெறியாகும். முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லின்தே அறம் (93) என்பது வள்ளுவம். சொற்களுள் நல்லவை உண்டு; தீய வையும் உண்டு; இனியவை உண்டு; இன்னாதவையும் உண்டு. நல்ல சொற்கள் கடுமையாக இருத்தலும் உண்டு; தீய சொற்கள் இனிமையாக இருத்தலும் உண்டு. இவ்வாறு சொற்களைப் பகுத்து நன்மையும் இனிமையும் ஒருங்கே விளையும் படியாகப் பேசிப் பழக வேண்டுவது இல்வாழ்வான் கடமை; எல்லோர் கடமையுமாகும். நல்ல சொற்களை ஆராய்ந்து அவ்ற்றுள்ளும் கடுமையான வற்றை நீக்கி இனிய சொற்களையே பேசிப் பழகினால் வாழ்க்கையில் பாவங்கள் தேய அறம் பெருகும். அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் (96) என்பர் பொய்யா மொழியார். வாழ்க்கையில் இன்பம். பயக்கத் தக்க இனிய சொற்கள் உள்ளபோது கடுஞ். சொற்களை ஏன் கூற வேண்டும்? இங்ங்னம் கூறுவது இனிய கனிகள் இருக்கும்போது காய்களைத் தேடி க்