பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 97 கவர்ந்து உண்பது போன்ற அறியாமையாலன்றோ? என்று கூறுவர் அப்பெருந்தகை. ஒலியால் இனிமையும் உள்ளத் தில் இரக்கமும் கொண்டு வஞ்சனை இல்லாமல் சொல் லுதல் இனியவை கூறலுக்கு முதன்மையானவை. முகத் தில் இனிமையும் அகத்தில் இணக்கமும் கொண்டு இல் வாழ்வார் நடந்து கொள்வது அறக் கடமையாகும் என்பது உளங் கொள்ளத்தக்கது. இவர்களே செம்பொருள் கண்டவர் (91). இதனால் இல்வாழ்வார் சிறந்த ஞானி களாய் இருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. இவர்களையே வள்ளுவர் பெருமான் ஞானப்பகுதியில் சிறப்பென்னும் செம்பொருள் காண்பவராகக் (358) குறித்தல் ஈண்டு நினைவு கூர்தற்குரியது.இதுவே'சிவநிலை’. மணிவாசகப்பெருமான் செம்மையே ஆய சிவபதம்’ என்று குறித்ததையும் காண்க. இதுவே நாராயண பதம் - பரம பதமும் ஆம். அருந்தமிழ் நாட்டில் செம் பொருள் கண்டார் வாய்ச்சொல்லாக - ஆழ்வார்கள், நாயன்மார்களின் அருட்பாடலாக - ஏராளமாய் உள்ளன. வாழ்க்கையில் இனியவை கூறல் என்பதற்கு இவற்றை விட வேறு என்ன வேண்டும்? 3. செய்ங்கன்றி அறிதல்: அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தும் போது அறத்தின் ஒரு கூற்ாகிய செய்ந்நன்றி அறிதல்’ என்பதையும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்யாவிட்டால், உலக வாழ்க்கை நடைபெறாது. அவ்வாறு உதவி செய்தோரை மறவாமல் அவர் செய்த நன்மையைப் போற்றுவது நமது கடமையாகும். ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளுள் பலவகை உண்டு. இதற்குமுன் அவருக்கு ஒர் உதவியும் செய்யாதிருக்கும்போது காரணமில்லாமல் ஒருவர் மனம் உவ்ந்து தாமே உதவி செய்வதும் உண்டு. அந்த உதவிக்குக் கைம்மாறு இல்லை எனலாம்; மண்ணுலகமும் விண்ணுல கமும் கொடுத்தாலும் அதற்கு அவை ஈடாகா. 92. திருவா. பிடித்த பத்து ~ 3 த.இ.அ-7