பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது (101) என்பது வள்ளுவம். இந்த வாக்கு மேலோட்டமாக நோக்கப் படும்போது புனைந்துரைபோல் காணப்படும். ஆனால் இது மெய்யுரை. நான்கும் நான்கும் சேரின் எட்டாகும் என்பது, கணிதமுறையில் எவ்வளவு மெய்யுரையோ, அவ்வளவு மெய்யுரை இது. இந்த உரையை ஆழ்ந்து நோக்குவோம். கைலைநாதன் பாற்கடலானுக்கு உதவி ஒன்றும் செய்ய வில்லை என்று கொள்வோம். இந்நிலையில் கைலைநாதனின் பசியைத் தீர்ப்பதற்கு நான்கு வெண் பொற்காசுகள் பெறும் உணவளிக்கின்றான் பாற்கடலான். பசிப்பிணி தீரப்பெற்ற கைலைநாதன் பிறிதொரு சமயம் பாற்கடலானுக்கு நூறாயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கின்றான். நூறாயிரம் வெண்பொற்காசுகளும் நான்கு வெண்பொற்காசுகளுக்கு நிகராகா. நிகராகாமை. எங்ங்ணம் எனில், காட்டுவேன். பாற்கடலான் நான்கு வெண்பொற் காசு உதவி செய்தக்கால் கைலைநாதன் செய்த உதவி ஒன்றும் இல்லை. கைலைநாதன் செய்த உதவியோடு பாற்கடலான் செய்த உதவியைக் கணித வாய்ப்பாட்டால் கூறுவேன். கைலைநாதன் உதவி -0 பாற்கடலான் உதவி - 4. அதாவது 0 : 4 இங்ங்ணமே பாற்கடலான் செய்த உதவியோடு கைலை நாதன், செய்த உதவியை ஒப்பு நோக்கிக் கணித வாய் பாட்டால் காட்டுவேன். பாற்கடலான் உதவி - 4 கைலைநாதன் உதவி - 100000.