பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் § 9 அதாவது 4 : 100000. 0 : 4 = grosso (Infinity) 4 : 1 000 00 = 25 000. இருபத்தையாயிரம் எண்ணிலிக்குச் சற்றும் ஒப்பாகாது என்பது புனைந்துரையா? அன்று. அன்று, இப்போது மேல் நோக்காகக் காண்பார்க்குப் புனைந்துரையாகக் காணப்பட்ட உரை முற்றிலும் மெய்யுரையாக உள்ளமை தெளிவாகின்றதல்லவா? இவ்விடத்தில் சமண முனிவரின் கருத்தை நினைத் தல் தகும். உறக்கும் துணையதோர் ஆலம்ம்வித் தீண்டி இறப்ப நிழல்பயந் தாஅங்கு) - அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்.’ (உறக்கும் - மிகச் சிறிய, ஈண்டி - வளர்ந்து; இறப்ப - மிகவும்: பயத்தல் - தருதல்: தக்கார் - தகுதியுடை யோர்; வான் - ஆகாயம்; அறப்பயன் - தருமத்தின் பயன்) என்பது அம்முனிவரின் திருவாக்கு. ஆலமரத்தின் விதை சிறிதாயினும் அது வானுற ஓங்கி வளர்ந்து மிக்க நிழ லைத் தருவது போல, தானம் செய்யப்பட்டபொருள் சிறிதாக இருந்தாலும், அது தகுதியுடைய நல்லோர் கையில் சேர்ந்தால் அஃது ஆகாயமும் சிறிது என்னும் படி தருமத்தின் மேலான பயனைப் பரப்பி விடும்’ என்ற கருத்து நம்மை வியக்க வைக்கின்றது. இது கம்பநாட னின் திருவாக்கையும் நினைக்கச் செய்கின்றது. - 93. நாலடியார் - 38 (அறன்வலியுறுத்தல்)