பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷翰级 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பாத்தெதிர' வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான் உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே." இதில் வாமனவதாரக் கதை பொதிந்துள்ளது. மாவலி யால் உதவி செய்யப்பட்டவன் மாதவன். அவனுக்குச் செய்த உதவி மூவடி மண், ஆகவின் அது சிறியது. அதன் உதவிப் பயனோ அந்த மாதவனின் சால்பு போல மூவுல கையும் அவர்க்கு ஆக்கி விட்டது என்று விரித்துப் பொருள் கொண்டு மகிழலாம். இக்கருத்து, உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து (105) என்ற குறளில் வந்துள்ளதைக் காணலாம். கைம்மாறான உதவி காரணத்தானும், பொருளாளனும், காலத்தானு மாகிய மூவகையானும் முன்செய்த உதவியின் அள வு அல்ல; உதவி செய்யப்பட்டார் சால்பின் அளவாயிற்று” என்பது இதன் கருத்து. இக்குறளின் கருத்தே எடுத்துக் காட்டாக நின்று கற்றோர்க்கினிய கம்ப நாடனி ன் கவிதையின் ஈற்றடியைப் பூரிக்கச் செய்து விட்டது. என்று கருதலாம். இன்னும், தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணிர்க் கயத்துட் சிறுமீன் சினையினும் நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு மன்னர்க் கிருக்க நிழலா கும்மே” என்ற அதிவீரராம பாண்டியனின் திருவாக்கும் ஈண்டுக் சிந்திக்கத் தக்கது. மேலும், 94. கம்ப. பால. வேள்வி - 35, 95. நறுந்தொகை-17,