பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix வைணவ இலக்கியங்களின் மேற்கோள்களுடனும் இக்கால அறிவியல் வளர்ச்சியுடனும் ஒப்பிட்டுப் பேசும் பாங்கு மிகவும் சுவையான பகுதியாகும் (பக். 308-309). பொதுவாக நூல்முழுதும், ஆசிரியரின் இலக்கண இலக்கிய அறிவையும், குறிப்பாக வைணவ சமயத்திலும் அதன் இலக்கியங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் அவருக் குள்ள ஆழ்ந்த பயிற்சியையும் வெளிப்படுத்துகின்றன. இந்நூல் தமிழ்கூறும் நல்லுலகிற்குக் கிடைத்த ஒர் மாமணி. தமிழின்பால் காதல் கொண்ட ஒவ்வொரு வரும் பன்முறை படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இஃது என்பதில் ஐயமில்லை. -எஸ். நடராசன்