பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் 1. Ó 1 இணைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் (87) என்ற குறளின் உரையில் பரிமேலழகர் பொருளளவு "தான் சிறிதாயினும் தக்கார்க் கைப் பட்டக்கால், வான் சிறிதாப் போர்த்து விடும் ஆகலின், இணைத்துணைத்து என்ப் தொன்றில்லை என்றும் கூறினார்’ என்று விரித் துரைத்ததையும் சிந்தித்து மகிழலாம். பெரிய துன்பம் நேர்ந்து நெருக்கடி ஏற்பட்ட காலத் தில் ஒருவர் செய்த உதவியும் சிறந்த உதவியே யாகும். அந்த உதவி சிறிய உதவியாக இருக்கலாம்; என்றாலும் தக்க காலத்தில் செய்யப்பட்டதாதலால் அது மண்ணுல கத்தை விடப் பெருமை உடையதாகும். காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது ( 102) (நன்றி உபகாரம்; மாண - மிக) என்பது வள்ளுவம். இவருக்கு இப்போது உதவினால் நாளைக்கு இன்ன கைம்மாறு கிடைக்கும் என்று பயனை ஆராயாமல் ஒருவர் செய்த உதவியும் சிறப்புடையது; அதன் தாரதம்மியத்தை ஆராய்ந்தால், அது கடலை விடப் பெரிய நன்மையுடையதாக இருக்கும் பயன்துக்கார் செய்த உதவி நயன்துக்கின் நன்மை கடலிலும் பெரிது (103) என்பது வள்ளுவரின் சொல்லோவியம். ஒருவர் செய்யும் உதவியில் சிறுமை பெருமை காண முடியாது. உதவியைப் போற்றுவதில் பயன் கண்டவர் கள், தினையளவு பயன் பெற்றாலும், அதையே பனையள வாகக் கொள்வார்கள். ஆதலால் உதவிக்கு ஈடானது கைம்மாறு என்று சொல்ல முடியாது. அந்த உதவியை