பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f G 2 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை ஏற்றுக் கொண்டவர்களின் பெருந்தன்மைக்கு ஏற்ற ஆள வாகவே அது திகழும் (104, 105) என்பவை வள்ளு வரின் பொய்யாமொழிகள். ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறம் ஆகாது; ஆனால் அவர் செய்த தீமையை அப்பொழுதே மறந்து விடுவது அறம் ஆகும் என்பதும் அப்பெருமானின் வாய்மொழி (108). கொல்லுவதைப் போன்ற கொடுமையை ஒருவர் இழைத்தாலும் அவர் அதற்குமுன் செய்துள்ள ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் தீமை மறந்து போகும் (109). இங்ங்னம் வள்ளு வர் பெருமான் செய்ந்நன்றிபற்றி துவன்ற கருத்துகள் பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் ஊடுருவி நிற்பதைக் காணலாம். - ஆலத்துார் என்பது சோழ நாட்டிலுள்ள ஓர் ஊர். அவ்வூரில் வாழ்ந்த புலவர் ஒருவரின் இயற்பெயர் தெரிந் திலது. அவர் ஆலத்துர் கிழார் என்றே வழங்கப்படு கின்றார். ஒருசமயம் இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அரசவைக்கு வருகின்றார். இக் கிள்ளிவளவன் சோழ நாட்டிலுள்ள சிறுகுடியில் வாழ்ந்த வேளாளர்த் தலைவனான பண்ணனின் கைவண்மையை விதந்தோதுமாற்றால் அவனது இல்லத்தைப் பசிப் பிணி மருத்துவன் இல்லம்' (புறம் - 173) என்று "பாணாற்றுப் படையாகப் பாடியுள்ளான். இவன் அவைக்கு வந்த புலவர்பெருமான் இவனை மிகவும் சிறப்பித்துப் பாடிப் பெருஞ் செல்வத்துடன் திரும்புகின் றார். அரசன் புலவரை நோக்கி, எம்மை நினைந்து மீளவும் வருதிரோ? என்று வினவ, அதற்கு அப்புலவர் பெருமான் உரைத்த மறுமொழி பாடலாக அமைந்தது. ஆன்முலை அறுத்த அறணி லோர்க்கும் மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும் குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும் வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவென