பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் I 0.3 நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென அறம் பாடிற்றே" (அறனில்லோர் - தீயோர்; இழை - ஆபரணம்:குரவர்தந்தை தாயர் வழுவாய் மருங்கின் - பாதகத்தினை ஆராயுமிடத்து; கழுவாய் - போக்கும் வழி; புடை பெயர்தல் - கீழ் மேலாம் காலம்; செய்தி - செய்த நன்றி; கொன்றோர் சிதைத்தோர்; உய்தி உய்யும் வழி, பிழைத்தல்) என்பது இப்பாடற் பகுதி. இங்கு அறம்' என்பது அற நூலைக் குறிக்கின்றது. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு (110) என்ற குறளுரையில் பெரிய அறங்களைச் சிதைத்தலா வது, ஆன்முலை அறுத்தலும் மகளிர் கருவினைச் சிதைத் தலும், பார்ப்பார் தபுதலும் முதலிய பாதகங்களைச் செய் தல்’ என இப்பாடற்பகுதியை உரை நடையிலமைத்தனர் பரிமேலழகர். இப்பாடலின் குரவர் தப்பிய கொடுமை யோர்க்கும் என்ற மூன்றாம் அடி பரிமேலழகர் காலத் திலேயே பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் எனத் திருத்தப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. இப்பாடலில் உள்ள கழுவாயும் உள' என்ற தொடரைப் பரிமேலழகர் நோய் நாடி (948) என்ற குறளின் உரையிலும் எடுத் தாண்டுள்ளார். திருவள்ளுவரின் 'எந்நன்றி என்ற சொற் றொடருக்கு இப்புறநானூற்றுப் பாடல் விரிவுரை தருவ தாக அமைந்துள்ளது. செய்ந்நன்றி கோறல்' என்ற கருத்து திருக்குறளில் அறத்துப்பாலில் அமைந்துள்ளதாத லால் புறநானூற்றுப் புலவர் 'அறம் பாடிற்றே என்று 96. புறம்-34