பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷盘6 மிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை (சிதைவு- கெடுதல்; காதல் - அன்பு: தெய்வப்பதவி . தெய்வத்தின் தானத்தையுடைய, வதை புரிகுநர். கொலை புரிந்தவர்கள், ஆற்றல்-உபாயம்; மாயா. அழியாத, உபாயம்-வழி) இதில் பெரிய பாவங்களனைத்தினும் கொடியது இச் செய்ந்நன்றிக் கொலை என்று செய்ந்நன்றி மறத்திலின் கொடுமையை அநுமன் வாக்கில் காணலாம். இவ்விடத் தில் மாருதி வாக்கில் ஆறு பாடல்களை அமைக்கின்றான் கம்ப நாடன். இன்னொரு பாடல்: உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மா றாக மதயானை அனைய மைந்த! மற்றுமுண் டாக அற்றே சிதையாத செருவி லன்னான் முன்சென்று செறுநர் மார்பில் உதையானேல் உதையுண்டு) ஆவி உலவானேல் உலகின் மன்னோ?" 1உதவாமல் ஒருவன் செய்த உதவி - கைம்மாறு கருதாத உதவி; செரு - போர்; செறுநர் - பகைவர்; உதையானேல்-படைக்கலங்களைச் செலுத்திடானாயி னும்; உதையுண்டு-அடிபட்டு; ஆவி-உயிர் உலவா னேல்-ஒழிந்திடானாயினும், கைம்மாறு-மாற்றுதவி) செய்யாமல் செய்த உதவியாளனுக்காக ஒருவன் போர்க் களத்திற்குச் சென்று அவனுடைய பகைவனை அழித்தலே முறை; அஃது இயலாவிடில் அப்பகைவர் கையால்தான் உயிர் மாயலாம். இந்த இரண்டும் செய்தால் செய்யாமல் செய்த உதவிக்கு ஒருவாறு ஈடாகலாம். இவையன்றி வேறு என்ன உளது?’ என்ற அநுமன் வாக்கில் செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும், வானகமும் ஆற்றல் அரிது’ 199. டிெ. 66