பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில் அறம் 1 07 என்ற வள்ளுவத்தின் கருத்து அமைந்திருத்தலைக் கண்டு மகிழலாம். செஞ்சோற்றுக் கடன் கழித்தல் ஒரு வகையில் செய்த் நன்றி அறிதலுக்கு ஒப்பாகும். சுக்கிரீவன் கருத்துப்படி போர்க்களத்தில் தோன்றிய கும்பகருணனைத் தம் பக்கம் சேர்த்துக் கொள்வதென முடிவு செய்கின்றான் இராமன். வீடணன்மூலம் அழைப்பும் அனுப்புகின்றான். சகோதரர் களிடையே நடைபெற்ற பேச்சை நாம் அறிவோம். 'தம்பியை எடுத்து மார்பில் தழுவிக்கொண்டு தன் தறுகண் களில் வெம்புநீர் சொரிய நிற்கும் நிலையில் பேசுகின்றான் கும்பகருணன், நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்து விட்டார்க்கு உயிர்கொடாது அங்குப் போகேன் தார்க்கோல மேனி மைந்த! என்துயர் தவிர்த்தி யாகில் கார்க்கோவ மேனி யானைக் கூடுதி கடிதின் ஏ.கி.' (நீர்க்கோலம்-நீரில் எழுதிய கோலம்; நச்சி-விரும்பி; தார்-மாலை; மேனி-உடல்) . தன்னை ஊட்டி வளர்த்த அண்ணன் பொருட்டுப் போர்க்களத்தில் தன் உயிரைக் கொடாது திரும்புவ: தில்லை என்ற உறுதியோடு பேசுகின்ற்ான் கும்பகருணன். இன்னும், கருத்திலா இறைவன் தீமை கருதினால் அதனைக் காத்துத் திருத்தலாம் ஆகில் நன்றே திருத்தலாம் தீரா தாயின் 101. கும்பகருணன் வதை-155