பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

箕酸8 தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை பொருத்துறு பொருளுண் டாமோ பொருதொழிற் குரிய ராகி ஒருத்தரின் முன்னம் சாதல் உண்டவர்க் குரிய தம்மா." fகருத்து-ஆலோசனை: இறைவன்-தலைவன்; தீரா தாயின்-திருத்த முடியாதாயின்; பொருதொழில். போரிடும் தொழில்; ஒருத்தர்-ஒப்பற்ற தலைவர்) என்கின்றான். ஆலோசனை இல்லாத தலைவன் தீய தொழிலை மேற்கொள்ளக் கருதினால், அதனைத் தடுத்து அவனைத் திருத்துவது கூடுமாயின் திருத்துதல் நல்லது: அங்ஙனம் திருத்துவது முடியாதாயின் மாற்றாரைச் சேர்த லால் அடையக்கூடிய பொருளுண்டோ? ஒருவருடைய சோற்றை உண்டவர்க்கு உரிய செயல், பொருதொழிற்கு உரிமையுடையவராக இருந்து ஒப்பற்ற தலைவர்க்கு முன்னம் உயிர் விடுதலே ஆகும்' என்று தான் செஞ் சோற்றுக் கடன் கழிப்பதே கருமமும், தருமமும் ஆகும் என்ற உறுதியை எடுத்தியம்புகின்றான். 'செஞ்சோற்றுக் கடன் கழித்தல்’ என்ற அறத்தை வில்லி பாரதத்திலும் காண்கின்றோம். கண்ணனின் துண்டுதலால் குந்திதேவி கன்னனிடம் வருகின்றாள். தான் அவனுடைய ஈன்ற தாய் என்பதை மெய்ப்பித்து ஐவர் பக்கம் வந்து சேருமாறு வேண்டுகின்றாள். என் மகனே, ஐவர் பக்கம் வந்து சேர்க. அப்படிச் செய்தால் ஐவரும் நின் மலரடியை அன்பினால் வணங்குவார்கள். உரிமை யால் மனம் ஒத்து ஏவல் புரிவார்கள். நீ தனிமையாகப் பேரரசனாவாய். பிற அரசர்கள் யாவரும் நின் வாயிற் படியில் வந்து காத்துக்கிடக்க, நீ ஆண்மையும், செல்வமும் விளங்க குரு குலக் குரிசிலாய்த் திகழலாம். நின் கடனும் அதுவேயாகுக' என்பது அவள் வேண்டுகோள். 102. கும்பகரு ண்ன் வன்த்-157.