பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் í 6 3 அதற்குக் கன்னன் தந்த மறு மொழி: 'அருமை அன்னையே, என்னைப் பெற்ற நீ அன்பு இல்லாமை யாலோ, அல்லது பெரும்பழியை நாணியோ என்னைக் கைவிட்டீர்; அற்றை நாள் தொடங்கி என்னைத் துரியோ தனன் இன்றளவும் ஆர் உயிர் துணை எனக் கருதுகின் றான். அங்க தேசத்து அரசனாகக் கொற்றமா மகுடம் புனைந்து, அரசுப் பொறுப்பை வழங்கினான். இருவரும் சேர்ந்து உண்கின்றோம். தம்பியரும் சுற்றமானவரும் என்னை வணங்கச் செய்து தோற்றமும் ஏற்றமும் அளித் துள்ளான். இத்தகையவனை நடுவில் கைவிட்டு (இக் காலத்துக் கட்சி மாறிகள் போல்) வருதல் அழகோ? திடம்படுத் திடுவேல் இராசரா சனுக்குச் செருமுனைச் சென்றுசெஞ் சோற்றுக் கடன்கழிப் பதுவே எனக்கினிப் புகழும் கருமமும் தருமமும்! என்றான்' (செருமுனை-போர் முனை இது மட்டுமா?17-ஆம் நாள் போர் நடைபெற்றபோது கண்ணன் கன்னனிடம் அவன் செய்த புண்ணியம் அனைத் தையும் பெறுகின்றான். பின்னர் ஆதி மூலமே! என்றழைத்த கசேந்திரன்முன் அன்று தோற்றிய வடிவில் சேவை சாதிக்கின்றான். அப்போது கன்னன் தெளிந்த மனத்துடன் கண்ணனை நோக்கிப் பேசும் பேச்சு கல்நெஞ் சத்தையும் உருக்கக் கூடியது. அப்பேச்சாக அமைந்த ஒரு பாடல் : தருமன்மகன் முதலான அரிய காதல் தம்பியரோ(டு) எதிர்மலைந்து தறுகண் ஆண்மைச் செருவில்என(து) உயிர்அனைய தோழற் காகச் செஞ்சோற்றுக் கடன்களித்தேன் தேவர் கோவுக்கு 103. வில்லி பாரதம்-கிருட்டிணன் துரது 252.