பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ji I {} தமிழ் இலக்கியங்களில் அறம், நீதி, முறைமை உரைபெறுநல் கவசமும்குண் டலமும் ஈந்தேன்; உற்றபெரு நல்வினைப்பே(று) உனக்கே தந்தேன்; மருதிடைமுன் தவழ்ந்தருளும் செங்கண் மாலே! மாதவத்தால் ஒருதமியன் வாழ்ந்த வாறே" (செரு போர்; தேவர்க்கோ - இந்திரன்; மருது - இரட்டை மருத மரம்.) இதில் கண்ணன் தன் தோழர்க்காகச் செஞ்சோற்றுக் கடன் கழித்தமையை மிக்க மனநிறைவுடன் பேசுவதைக் காண் கின்றோம். 4. ஒப்புரவு அறிதல்: ஒப்புரவு அறிதல் என்பது தக் கார்க்கு உதவியாக இருத்தலாகும். எவ்வளவு ஆற்றலு டையவர்களும் இந்த உலகில் பிறர் உதவியின்றி வாழ முடியாது. நாம் வாழும் வீடு எத்தனையோ தொழிலா ளர்களின் உழைப்பால் கட்டப்பெற்றது. அந்தக் கட்ட மைப்பிற்கு வேண்டிய செங்கல், மணல், இரும்பு, மரம் முதலியவை யார் யாராலோ எங்கோ உற்பத்தி செய்யப் பெற்று கொணரப் பெற்றவை. உண்ணும் உணவுப் பொருள்களைப்பற்றிக் கருதினால் அவை வந்து வழியும், பல்லோர் உழைப்பினால் வந்தவை என்பதும் தெளிவுபடும். இப்படியே ஒவ்வொன்றையும் எண்ணினால் அவற்றில் பங்கு கொண்ட பல்லாயிர உழைப்பாளிகள் நம் கண் முன் நிற்பர். எனவே, உலகில் பலருடைய உழைப்பாலாகிய உதவி இல்லாமல் தனியொருவனின் வாழ்க்கை நன்முறை யில் அமையாது. இந்த உண்மையை அறிந்தவர்கட்கே தம் வாழ்க்கை முழுவதும் பிறர்க்குப் பயன்பட வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும்; கைம்மாறு கருதாமல் பலர்க்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணமும் இயல்பாக அமைந்து விடும். இவர்களே ஒப்புரவு அறிந்த இல்லறத் தT கள், 104. டிெ. 17-ஆம் நாள் போர். 248.