பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் முகம் நோற்றேன் பல்பிறவி . துன்னைக்காண்பதோர் ஆசையினால் ஏற்றேன். இப்பிறப்பை இடருற்றனன் எம்பெருமான்! கோற்றேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ் வேங்கடவா! ஆற்றேன் வந்தடைந்தேன்; அடியேனை யாட் கொண்டருளே.' -திருமங்கையாழ்வார் பணிவாழ்க்கையின் இறுதிக்காலமாகிய பதினேழு ஆண்டுகள் திருப்பதியில் வாழ வழி வகுத்து அவன் திருவடி வாரத்தில் நிறுவப் பெற்றுள்ள பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையை நிறுவவும் அதில் துறைத்தலைவனாக வும் பேராசிரியனாகவும் பணியாற்றும் வாய்ப்புகளை நல்கினான் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலாகிய திருவேங்கடமுடையான். ஒய்வுபெற்ற பின் (அக்டோபர்-1977) சென்னையில் அவன் இருப்பிட மாகிய வேங்கடம் என்ற இல்லத்தில் வாழவைத்துள் ளான். இடைஇடையே பல்வேறு அதிர்ச்சி வைத்தியம் கந்தருளினாலும், என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே? என்ற திருமூலர் திருவாக்கை நினைவு கூரச்செய்து தமிழ்ப்பணியும் சமயப்பணியும் வளர்க்கத் துணைபுரிந்து 1. பெரி. திரு. 1-9 :8 2. திருமந்திரம்-91