பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கியங்களில்-அறம் | 1 || ஒப்புரவாளரின் வாழ்க்கையை மழையின் தன்மை யோடு ஒப்பிட்டுப் பேசுவர் வள்ளுவப் பெருந்தகை. பல இடங்களிலிருந்து கதிரவன் வெப்பத்தால் சேர்த்துக் கொண்ட நீர்த்துளிகளே ஆவி உருவாக மேகமாய் உள் வளன. இந்த மேகமே திரும்பவும் கைம்மாறு கருதாமல், இன்னார்க்கு இன்ன பயன் கருதி என்ற வரையறையும் இல் லாமல் உதவுகின்றது. ஒப்புரவாளர் செய்யும் உதவி களும் மழை பயக்கும் உதவிகளைப் போன்றவைகளே. இந்த உதவிகளும் கைம்மாறு கருதாதவையே (211). ஒப்புரவாளர் முயன்று உழைத்துச் சேர்த்த பொருள்கள் யாவும் பிறர்க்கு உதவி செய்யும் பொருட்டேயாகும் (212). இந்த ஒப்புரவு போன்ற நன்மையை விண்ணுல கிலும் மண்ணுலகிலும் பெற முடியாது (213). உலகம் எல்லாம் ஒரு குடும்பமாய் இயங்கும் தன்மையை ஒப்புர வால் அறிந்தவனே உயிருடன் வாழும் சிறப்புடையவன். இதையறியாதவன் செத்தவருள் ஒருவனாகவே கருதப் பெறத்தக்கவன். உலகம் வாழ வேண்டும் என்று விரும்புகின்ற பேரறி ஞனின் செல்வம் ஊருணியில் சேர்ந்த நீர் போன்றது. வெள்ளம் பெருகி வந்த காலத்திலே யன்றி பிற சமயங் களிலும் குளம் ஊரார்க்கு நீர் உதவிக் கொண்டேயிருக் கும். ஒப்புரவாளரின் வாழ்க்கையும் குளத்தைப் போன்றதே. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு (215) என்பது வள்ளுவம். ஒப்புரவாளனிடம்இருக்கும்செல்வத்தை ஊர் நடுவே பயனுள்ள மரம் பழம் நிறைந்து பழுத்த தற்குஒப்பிட்டுக் காட்டுவார் அப்பெருந்தகை.பழுத்த காலத் தில் மரம் எல்லோர்க்கும் பழம் உதவும். பழம் தீர்ந்த காலத்தில் தன் பழங்களை இழந்ததற்கு வருந்தாமல் ஊரார்க்கு நல்கப் பழம் இல்லையே என்று வாடி நிற்கும்.